தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு அடையாளம் காட்டியது தேனி மாவட்டம். தஞ்சாவூர் எப்படி எனது சொந்த மாவட்டமோ, அதேபோன்று இதுவும் எனது சொந்த மாவட்டம் தான் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் என்றும் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டிய ஒரே கட்சி அமமுக தான் எனவும் கூறியுள்ளார். மேலும், அம்மாவின் உண்மையான ஆட்சியை வழங்க மக்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் குக்கர் சின்னம் என்று தெரிவித்து மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.