மதுரை : உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிகழ்வு முடிந்து திருமங்கலம் நோக்கி திரும்பியுள்ளார். உடன் அதிமுக கட்சி பிரமுகர்களும் வந்துள்ளனர். அப்போது, மங்கல்ரேவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, ஒரு கும்பல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரை வழிமறித்துள்ளனர். அவர்கள், அமமுக கட்சியினர் என்பதும், அமமுக தலைவர் டி.டி.வி.தினகரனை ஆர்.பி.உதயகுமார் தவறாக பேசியதால் அவரது காரை வழிமறித்ததாகவும் கூறப்படுகிறது. […]
சென்னை : இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக மது ஒழிப்பு மாநாடு, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை கூறினார் . அவர் பேசுகையில், ” மது ஒழிப்பு தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று. விசிகவின் மாநாடு தற்போது தேவையான ஒன்றுதான். அதுவும் காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடப்பது […]
T.T.V.Dhinakaran : முன்பு உங்கள் வீட்டு காவல் நாயாக இருந்தோம் என டிடிவி.தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி. மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் டிடிவி.தினகரன் ஆகியோர் களமிறங்குகின்றனர். டி.டி.வி.தினகரன், தங்கத்தமிழ்செல்வன் ஆகிய இருவருமே அதிமுக கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் என்பதால் இந்த தேர்தல் களம் மிக சுவாரஸ்யமாகவும், பிரச்சார களம் மிக தீவிரமாகவும் இருக்கிறது. முன்னதாக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் […]
AMMK-OPS : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி விவகாரங்களை விரைந்து முடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் திமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை முழுதாக நிறைவு செய்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தின் அடுத்து அனைவரும் எதிர்பார்ப்பது, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணிகள். இதில் பிரதான கட்சிகள் எந்தெந்த கூட்டணிக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்கள் […]
TTV Dhinakaran : மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் இதனால் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். […]
பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் அல்லது தனித்து போட்டியிடும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமமுக கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. முதலில் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றோம். இதன்பின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை சொல்ல முடியாத காரணத்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. இதனால் வரும் மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைப்பது குறித்து சில […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) கட்சியின் தலைவருமான டிடிவி.தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், தனது கட்சி வளர்ச்சிக்காக நிதி கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில், நீங்கள் (ஆதரவாளர்கள்) என் மீது கொண்டுள்ள அன்பும், நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பும் அவ்வளவு அற்புதமானது. எனக்கு எப்போதும் எல்லாமும் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு அன்புகலந்த கண்டிப்பான […]
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “மின் கட்டண உயர்வால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்திருக்கும் நூல் உற்பத்தி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருப்பதால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.” […]
அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் இன்று அமமுக கழக மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி அவர்களின் இல்ல திருமண விழாவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை ஏற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். அப்போது யாருடன் […]
அமமுகவின் செயற்குழு கூட்டம் திருச்சியில் வரும் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் திரு.C.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 04:11.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி, ஃபெமினா ஹோட்டலில் உள்ள காவேரி […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். ஒருவேளை கூட்டணியில் அமமுக இருக்க முடியாது என்ற சூழ்நிலை வந்தால் தேர்தலில் தனித்து நிற்கவும் தயார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் அமமுக இருக்கலாம். எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அமமுக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான டிடிவி தினகரன், கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் […]
எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை ‘தீய சக்தி’ என்று சொன்ன புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களும் தங்கள் காலம் வரை திமுகவை தலைதூக்கவிடாமல் தமிழக மக்களை பாதுகாத்து வந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில துரோகிகளாலும், சில சுயநலவாதிகளாலும் அம்மா […]
வரும் 21ஆம் தேதி காலை 9 மணியளவில், கோவையில் அமமுக சார்பில் கழக செயல்வீரராகள் கூட்டம் நடைபெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட புரட்சித் தலைவர் அவர்களின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. என சூளுரைத்து ஏழை, எளிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களுமாகிய தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது […]
அமமுக தலைவர் டிடிவி தினகரன் இன்று மதுரையில் நடைபெற்ற அமமுக கட்சி நிகழ்வுகளில் கலந்துகொன்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து, தமிழக அரசியல் நிலவரம், ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். தமிழகத்தில் ஒரு பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவராக முடியவில்லை என்றால் எங்கே இருக்கிறது உங்கள் சமூக நீதி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் விமர்சித்து இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் […]
எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி தான் திமுக ஆட்சி என டிடிவி தினகரன் விமர்சனம். தி.மு.க அரசு மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகிறது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது என […]
ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என டிடிவி ட்வீட். சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும் 2009-ஆம் ஆண்டுக்கு முன்னும், பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல. இந்த ஊதிய முரண்பாட்டைக் களையக்கோரி […]
தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு. தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை […]
திட்டங்களைக் கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 100 நாள் வேலை ஒதுக்கீடு, சாலை வசதி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் அனைத்திலும் இந்த ஊராட்சிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது. […]
காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவில், தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க […]