Seeman: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீமான் கூறியதாவது, சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? என கேள்வி உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா என்றார். […]
எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி தான் திமுக ஆட்சி என டிடிவி தினகரன் விமர்சனம். தி.மு.க அரசு மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகிறது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது என […]
அதிமுகவின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என உ. தனியரசு பேட்டி. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவில்லை என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 40 மாவட்ட செயலாளர்களில் ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறு யாரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவில்லை. திட்டமிட்ட சூழ்ச்சியை, வஞ்சகத்தை நடத்தி […]
போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் பதிவு. தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் கடை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசின் கூட்டுறவுத்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டிருந்த […]
டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராகியுள்ளார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார். ஏற்கனவே இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். அதன்படி, இரட்டை இலை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை டிடிவிக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று ஆஜராகியுள்ளார். இரட்டை […]
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை. இரட்டை இலை சின்ன பெற்று தருவதற்கு லஞ்ச கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீட்டில் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்தவர் வழக்கறிஞர் கோபிநாத். டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கோபிநாத்தை தொடர்புகொண்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு […]
லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன். இரட்டை இல்லை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திர சேகரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில், டிடிவி தினகரனை விசாரிக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தினகரன், சுகேஷ் சந்திர சேகரிடம் விசாரணை […]
விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி தினகரன் ட்வீட். பாலியல் தொந்தரவு விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளார். போலீசில் புகார் இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் அப்பெண் புகார் அளித்த நிலையில் திமுகவை சேர்ந்த 2 பேர், கூலித் தொழிலாளர்கள் 2 பேர், […]
கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா? என டிடிவி தினகரன் ட்வீட். மாற்றுத்திறனாளிகள் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் […]
தமிழக வேளாண்மை பட்ஜெட், கறி செய்து சாப்பிட முடியாத காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போடப்பட்ட இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றிற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக வேளாண் அமைச்சர் பெருமிதம் பொங்கக் கூறியிருக்கிறார். ஆனால், அவற்றில் எத்தனை அறிவிப்புகளால் […]
ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் மாநில அரசுகளின் வருவாயில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை. 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள் தொடங்கும் என பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து […]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு, ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய கள நாயகர், வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று என டிடிவி தினகரன் ட்வீட். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நம் […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை’ என்பதை உலகிற்குச் சொல்லும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்டிகையான பொங்கல் திருநாளில் உலகம் முழுக்க வாழ்கிற தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ‘விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிற நாடுதான் உன்னதமான தேசமாக இருக்கும்’ என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளையும் கொண்டாடுவதற்காகத்தான் நம்முடைய […]
கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினரும் நிவாரண உதவாய்க்காலி […]
தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க சொன்னது ஒன்று, செய்திருப்பது வேறு என டிடிவி தினகரன் விமர்சனம். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்றவுடன் தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் உயர்த்தும் அளவுக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட மிகப்பெரிய செயல்திட்டத்தை தமிழக அரசு வெளியிடும் என்று அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு பொய்யாகி இருக்கிறது. ஏனெனில், வழக்கமான நிதிநிலை அறிக்கையில் இருந்து சில அம்சங்களைப் பிரித்தெடுத்து […]
தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது என டிடிவி தினகரன் கருத்து. அதிமுக ஆட்சியின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்ட நிலையில், இதனை குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் வெள்ளை அறிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் […]
தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம், எங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தி விடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு, அதை நோக்கித்தான் பயணித்து செல்கிறோம். தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்தாது. தங்கள் இலக்கை நோக்கி பயணிப்போம். எங்கள் முயற்சியும், சின்னம்மாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க […]
கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற ஒரு தனி யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து […]
மேகதாது அணை கட்டியே தீருவோம் எனும் கர்நாடக அரசின் முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலன் கருதி மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது அம்மா மக்கள் […]
வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். கருத்துக்கணிப்புகளைத் தாண்டி கழகம் தனி முத்திரை பதிக்கப் போகிறது. போலிகளை அடையாளம் காட்டி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான வழித்தோன்றலாக பிரகாசிக்கப் போகிறோம் என கூறியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் நாளை […]