தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக மு.க ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின் வெற்றிக்கு பலரும் நேரில் சென்றும், சமூகவலைத்தளம் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்தே அனுப்பியுள்ளார். தமிழக […]
4:02:உதயநிதி வெற்றி|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி.50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 3:55-காட்பாடி தொகுதியில் 18-வது சுற்று முடிவில் 971 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை அ.தி.மு.க – 57828 தி.மு.க – 58,799 3:12-மார்கண்டேயன் வெற்றி|விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் 73,261 வாக்குகள் பெற்று வெற்றி .அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி […]
பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என முதல்வர், துணை முதல்வர் அறிக்கை. தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையன்று (நாளை) பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது மற்றும் ஊர்வலம் போன்றவைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை, தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுயிருந்தது. இந்த நிலையில், பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற […]
தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி, தளர்வறியா உழைப்பினால் இந்திய அளவில் தமிழகத்தை எப்போதும் முதன்மை […]
வாக்கு எண்ணிக்கையின்போது கட்சியினரும், தோழமை காட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் கூட்டு அறிக்கை. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், கருத்து கணிப்புகள் எந்தவித மனசோர்வை தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம். அதிமுக […]
கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க உத்தரவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். உள்நாட்டு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்தது அறிவித்திருந்தது. அதுபோல, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயம் செய்து அறிவித்திருந்தன. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி விலை உயர்வு […]
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் […]
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. […]
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு. சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்த நிலையில், அது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் […]
தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என ரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரம்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் […]
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை, தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளனர். கொரோனா குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கையிருப்பு வைக்கக்கூடிய வகையில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம் உள்ளதால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் […]
கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி என கேஎஸ் அழகிரி விமர்சனம். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி அரசுகள் படுதோல்வி அடைந்துள்ளன என குற்றசாட்டியுள்ளார். கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் […]
நாட்டை கெடுப்பவர்கள் ஆட்சி அமைந்துவிடாமல், ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி தொடரட்டும் என முதல்வர், துணை முதல்வர் அறிக்கை. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, மநீம, அமமுக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டியாக களம் காண்கின்றனர். தேர்தல் பரப்புரையில் இறுதி நாளான இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற்றது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் […]
திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டியிருக்கிறார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார் என விமர்சித்தார். கோவை மாவட்டமே இங்கு குவிந்துள்ளதை பாருங்கள் […]
சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் சட்ட – ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய முதல் மாநிலம் எனவும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? எதும் கிடையாது. நாட்டு மக்களையும் பார்க்கவில்லை, அரசாங்கத்தையும் […]
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் மூலம் பாராட்டு. நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. தங்களது நடிப்பு […]
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு கடந்த சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஓதுக்கீடு வழங்கியதை அடுத்து, ஒருபக்கம் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபக்கம் இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதாவது, சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இறுதியானது […]
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என தாராபுரம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்தவர் பிரதமர் மோடி என்றும் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை எல்லாம் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் உழைப்பால் உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கிறது எனவும் புகழ்ந்துள்ளார். இந்தியாவை வல்லரசாக்கும் கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். கேரளாவில் பாலக்காடு தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின், பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் தாராப்புரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தடைந்தார். உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள அமராவதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் எல் முருகனை பிரதமர் மோடியை வெற்றி வேல், வீர வேல் என முழக்கத்துடன் வரவேற்றார். இந்த பொதுக்கூட்டம் தேசிய முற்போக்கு […]