திமுக எம்.பி. கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதற்கு கனிமொழி, நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணி முதல் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரம் […]
தொகுதி பங்கீடு குறித்து நாளை மறுநாள் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து வரும் பிப் 24-ஆம் தேதி திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உம்மன் சாண்டி, கர்ஜேவாலா உள்ளிட்ட மேலிட பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தென்காசி பாவூர் சத்திரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி. விவசாயிகளின் நலனுக்காக ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். விவசாயிகள் பயிரிடம் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரமாண்ட சந்தை அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்ம் நெல்லை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு சந்தையை கட்ட அரசு பரிசீலிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் நெல்லை மாவட்டத்தில் ஈடுபட்ட போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேர்மையான முறையில் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒருவரை வீழ்த்தி வர வேண்டும் என நினைத்தால் முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஆட்சி செய்தாலும், எம்ஜிஆர், […]