சட்டப் பேரவையில் எதிரொலித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்,கோடநாடு வழக்கு – இபிஎஸ் வலியுறுத்தல்..!

Debate on Kodanad case and death of former Chief Minister Jayalalithaa in the Legislative Assembly today - EPS insistence

சட்டப் பேரவையில் இன்று கோடநாடு வழக்கு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கோடநாடு வழக்கு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை என்றும் இதுகுறித்து மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் திமுக எம்.எல்.ஏ சுதர்சனம் குறிப்பிட்டு பேசினார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,”இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால்,அவையில் பேசுவது மரபு அல்ல,இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்”, என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றே உறுப்பினர் சுதர்சனம் பேசினார்,மாறாக, வழக்கின் உள்ளே செல்லவில்லை,இதனால் அவைக்குறிப்ப்பில் இருந்து நீக்க தேவையில்லை”,என்று விளக்கம் அளித்துள்ளார்.