டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா நடைபெற்றது. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை போல பொதுமக்கள் பலரும் மலர்தூவி தங்களுடைய மரியாதையை செலுத்தினார்கள். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, முதல்வர் […]
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக அவரை நிற்கவைக்கிறது. அதிமுக தலைமையிலான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என அவரால் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். இந்த நிலையில், ஜெயலலிதா 77வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக […]
சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறித்து பேசியிருந்தார். அவர் பற்றி பேசிய ஓ.பன்னீர்செல்வம்” டாக்டர் வெங்கடேஷ் (சசிகலா அண்ணன் மகள்) சோபாவில் அமர்ந்திருக்க பக்கத்தில் உதயகுமார் என்ன நிலையில், எப்படி இருந்தார் என்பதை பற்றி நான் இப்போது இந்த இடத்தில் பேசினால் அது அரசியல் நாகரீகமாக இருக்காது. எனவே, எங்களை பற்றி பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும் என நான் இந்த இடத்தில் கூறுகிறேன்” என பேசியிருந்தார். இதனையடுத்து, […]
சென்னை : ஊழல் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, ஜெயலலிதாவின் சொத்துக்கள் நேற்று தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) வசம் ஒப்படைக்கப்பட்டன. அதில், 27 கிலோ தங்கம், 1,116 கிலோ வெள்ளி, வைர நகைகள், 10,000 புடவைகள், 750 செருப்பு ஜோடிகள், 1,526 ஏக்கர் நிலப் பத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் […]
சென்னை : அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா, “அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன். அதிமுகவில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வந்த பிறகு, அரசியல் குறித்து எம்.ஜி.ஆர். என்னிடம் பேசுவார். இந்தியாவின் 3வது பெரிய இயக்கமான அதிமுக சிலரின் சுயநலத்தால் வீழ்ச்சி யாரையும் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 முறை பதவி வகித்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சசிகலா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்தடைந்தார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, சசிகலா அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா, எஸ்டேட் […]
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு […]
சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அஞ்சலி செலுத்துவதற்கு வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி […]
ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ‘ என ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர். காலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அடுத்ததாக தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். எதிரிகள் […]
போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு ஜெ.தீபா பரபரப்பு பேட்டி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அந்தவகையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, ஜெயலலிதாவின் 6-ஆம் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசு மற்றும் சிபிஐயிடம் மனு அளிக்காமல் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியமும், வெளிப்படை தன்மையும் பின்பற்றவில்லை […]
ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து 1996-ல் அவர் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டு சேலைகள், 750 ஜோடி காலணிகள், […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தின் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மறுப்புலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 326 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்தனர். சிறப்பு காவல் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி 1,500 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விசாரணையில் மருது அழகுராஜ் ஆஜரானார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணையில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜரானார். கோடநாடு வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரும் ஆறுமுகசாமி ஆணையம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால், முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, 3 வாரம் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் மனு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை, முக்கிய ஆவணங்கள் மற்றும் அலுவலக அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் காணவில்லை […]
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் காணவில்லை என தகவல். கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பினருக்கு இடையே நடந்த கலவரத்தை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மூடி சீல் வைத்தார். இதன்பின் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து […]
கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல […]
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், ஜெயலலிதா நினைவிடம் செல்ல ஓபிஎஸ் திட்டம். சென்னை மெரினாவில் கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஜெயலலிதா நினைவிடம் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். […]