MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்வு பெறுகிறது. திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு […]
MK Stalin: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேர்தலுக்கு 4 நாட்கள் உள்ள நிலையில், நேற்று பாஜக தேர்தலை அறிக்கையை பிரதமர் மோடி […]
Election2024: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 6 நாட்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் பாஜக […]
MK Stalin: பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது, திமுக அரசின் சாதனைகள், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்து குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது […]
MK Stalin: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர் எனவும்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். கடந்த அதிமுக […]
MK Stalin: ஏழைகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் சிறப்புகளை எடுத்துரைத்து, மத்திய பாஜக அரசை விமர்சித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது ஏழைகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என […]
MK Stalin: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரை மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதையடுத்து மும்பையில் I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. READ MORE – இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.! ராகுல் தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்ரா மகாராஷ்டிராவில் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) முடிவடையும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் […]
சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்பொழுது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக கடந்த […]
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்றே பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கின. திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடைபெறும் நிலையில் அதில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சேலம் வந்தடைந்தார். சேலம் வந்த அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் மாநாட்டு திடலில் சுடரை உதயநிதியிடம் இருந்து […]
திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனைய திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையத்தை திறந்து வைத்தார். முன்னதாக புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து கேட்டறிந்தார் பிரதமர். இதையடுத்து, ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வின்போது, மத்திய அமைச்சர் […]
பல்கலைக்கழக வேந்தர்கள் பொறுப்பில் முதலமைச்சர் இருந்தால் முழுவதும் அரசியல் சாயம் பூசப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அதாவது, ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு கூடுதலாக தமிழக அரசு சார்பில் 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் […]
என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது PFI அமைப்பினர் திட்டமிட்டு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.- பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றசாட்டு. தமிழகத்தில் சமீப நாட்களில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஒரு சில ஊர்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் சம்பங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை கைது […]
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்று விட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.இந்த வேளையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.மேலும்,”அனைவரும், பாதுகாப்பாக இருங்கள்,தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.நான் தனிமைப்படுத்திகொண்டேன்” என பதிவிட்டார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும்,அறிக்கை மூலமும் கூறி வருகின்றனர். இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து வருதமடைந்ததாகவும்,அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தமிழக […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,பொதுக்குழு விழா மேடையில் பேசிய இபிஎஸ் கூறுகையில்:”கட்சிக்காக உழைத்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்.ஒற்றைத் தலைமை வேண்டும் என நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த வகையில்,கட்சியைக் காக்க ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தேடுத்துள்ளீர்கள்”,என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து,பேசிய இபிஎஸ்:”அம்மாவிடம் […]
திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்த நிலையில்,1,71,169 பயனாளிகளுக்கு ரூ.693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில், 1,71,169 பயனாளிகளுக்கு ரூ. 693.03 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். […]
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருவண்ணாமலை சென்றுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டுள்ளார். அப்போது,விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில்,திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 […]
உலகம் முழுவதும் நாளை(ஜூலை 10) தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது: ‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு நபிகள் நாயகம் […]
மாற்றுதிறனாளிகளின் அமைச்சராக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உள்ள நிலையில்,ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் முதல்வர் அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அந்த வகையில்,திருவண்ணாமலை சென்றுள்ள முதல்வர் கீழ்பெண்ணத்தூர் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் வீட்டிற்கு நேரில் சென்று உரையாடி,அச்சிறுவனுக்கு தேவையான உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,சற்று நேரத்தில் திருவண்ணமலையில், மாற்றுதிறனாளிகளுக்கான இல்லப் பராமரிப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.அதன்படி,இத்திட்டத்தின் மூலம் 52 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.87 லட்சம் செலவில் இணைப்பு சக்கரங்களுடன் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள்,முதுகு […]