கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 […]
கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. […]
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் சாட்சியம் அளிக்க இயலாததால் வீட்டில் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரியும் […]
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடநாடு வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இபிஎஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சாட்சியம் அளிக்க […]
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அதே சமயம்,கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடைபெற்று வருவதால், சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது மேல் விசாரணை நடத்தப்படும் நிலையில், சாட்சி விசாரணை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் நடைபெற்ற கொலை, […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்த உதகை அமர்வு நீதிமன்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜனவரி 28-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சயான், வாளையர் மனோஜ் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதுர. 150 சாட்சியங்களிடம் விசாரணை நிறைவு பெற்றது என்றும் தேவைப்பட்டால் […]
கோடநாடு வழக்கில் ஈபிஎஸ், சசிகலா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வாழ்க்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து. விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று 4 வாரத்துக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, […]
சட்டப் பேரவையில் இன்று கோடநாடு வழக்கு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கோடநாடு வழக்கு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை என்றும் இதுகுறித்து மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் திமுக எம்.எல்.ஏ சுதர்சனம் குறிப்பிட்டு பேசினார். இதனைத் தொடர்ந்து,பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,”இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால்,அவையில் பேசுவது மரபு அல்ல,இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்”, என்று […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி, நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக […]
கோடநாடு வழக்கில் போலீஸ் மேல்விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அனுபவ் ரவி மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்ததான விசாரணையில் போலீஸ் மேல் விசாரணைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போலீஸின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி போலீஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவ் ரவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதாகவும், அவர்கள் விருப்பப்படி வாக்குமூலம் […]
கோடநாடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு மீண்டும் விசாரணைக்கு தடை வித்திக்க கோரும் வழக்கில் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை ,கொள்ளை தொடர்பாக காவல்துறை விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.இந்த விசாரணையில் தனக்கு சில நபர்கள் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும்,காவல்துறைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல தன்னை கட்டாயப்படுத்துவதாகவும்,எனவே,இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்,இது தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி கோயம்புத்தூரை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில்,இந்தவழக்கு இன்று […]