Tag: TN Assembly 2021

“சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு” – முதல்வர் ஸ்டாலின்…!

காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த ஆக.13-ம் தேதி தொடங்கிய நிலையில் பொது பட்ஜெட் தாக்கல் மற்றும் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து,பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக,சட்டப்பேரவை கடைசி நாளான இன்று காவல்துறையினரின் நலன் கருதி திட்டங்கள்,நீட் தேர்வு விலக்கு மசோதா,கூட்டுறவு வங்கிகளில் […]

CM Stalin 4 Min Read
Default Image

#Breaking:தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது, இதனையடுத்து,ஒவ்வொரு துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று வரை நடைபெற்றது. 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.மேலும்,கடைசி நாளான இன்று காவல்துறைக்கு ஆணையம்,5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. […]

Speaker Appavu 3 Min Read
Default Image

#Breaking:”விரைவில் காவல்துறை ஆணையம்;பயண அட்டை” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழகத்தில் காவலர்களுக்கென ஒரு ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில்,காவல்துறை ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். குறிப்பாக காவலர்கள் பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும்.காவலர் முதல் ஆணையர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம். தமிழகத்தில் […]

- 3 Min Read
Default Image

“அதிமுக ஆட்சியில் கொலை,கொள்ளை நடைபெறவில்லை” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக ஆட்சியில் கொலை,கொள்ளை நடைபெறவில்லை என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, சட்ட ஒழுங்கு, தீயணைப்பு & மீட்பு பணிகள் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,அதிமுக ஆட்சியில் கொலை,கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,”தூத்துக்குடியில் ஜீப் மீது […]

#EPS 3 Min Read
Default Image

சட்டப் பேரவையில் எதிரொலித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்,கோடநாடு வழக்கு – இபிஎஸ் வலியுறுத்தல்..!

சட்டப் பேரவையில் இன்று கோடநாடு வழக்கு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கோடநாடு வழக்கு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை என்றும் இதுகுறித்து மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் திமுக எம்.எல்.ஏ சுதர்சனம் குறிப்பிட்டு பேசினார். இதனைத் தொடர்ந்து,பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,”இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால்,அவையில் பேசுவது மரபு அல்ல,இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்”, என்று […]

#EPS 3 Min Read
Default Image

“சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க…தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்” – முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் …!

தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை,சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, “கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, ஒரிசாவின் பாலூர், கர்நாடகாவின் தலைக்காடு ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு முயற்சிக்கப்படும். தமிழ் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகமெங்கும் பயணம் செய்வோம்.திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் தொல்லியல் […]

CM Stalin 4 Min Read
Default Image

Breaking:”அகழாய்வு பணிகள்…110 விதியின் கீழ்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தற்போது பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.இந்நிலையில்,கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது: “கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது.ஆனால்,தற்போது கீழடி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் […]

CM Stalin 3 Min Read
Default Image

Breaking:சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டப் பேரவையில் இன்று தீர்மானம்..?…!

சி.ஏ.ஏ.சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டப் பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்தது.இதன்மூலம்,கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் […]

CAA law 3 Min Read
Default Image

#Breaking:இனி போலிப்பத்திரம் ரத்து…..பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் …!

தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவையில் குறு – சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை,மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்டவைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் போலி பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், யாரேனும் போலி பத்திரத்தை பதிவு செய்திருந்தால் அதை பத்திரப்பதிவு தலைவரே நீக்கம் செய்ய வழிவகை உண்டு.இந்த சட்டத் […]

Deed registration bill 3 Min Read
Default Image

#Breaking:21 இட ஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

21 இட ஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான போராளிகளுக்கு விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது: “சமூக நிதிக் கொள்கையின் தாய்மொழியாக விளங்ககூடிய மாநிலம் நமது தமிழ்மாநிலம்,வகுப்புரிமை,வகுப்பவாரி உரிமை,இட ஒதுக்கீடு,சாதி ரீதியான ஒதுக்கீடு என்று எந்த பெயர் கூறி அழைத்தாலும் அதற்கு சமூக நீதி […]

CM Stalin 4 Min Read
Default Image

#Breaking:9 மாவட்டங்களில் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு – குடிசை மாற்று வாரியம்…!

9 மாவட்டங்களில் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் குடிசைமாற்று வாரியம் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதித் துறை & நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் & மகளிர் உரிமைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.மேலும்,தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட முன்வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்கிறார். இந்நிலையில்,உலக வங்கி நிதியில் நெல்லை,மதுரை,தஞ்சாவூர், சிவகங்கை, தேனி,தென்காசி, திண்டுக்கல்,சேலம்,நாமக்கல் […]

TN Assembly 2021 5 Min Read
Default Image

#Breaking:”பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை;கடுமையான தண்டனை தர புதிய சட்டம்” – முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று உறுதியளித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்போர் ,கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் […]

Schools and colleges 3 Min Read
Default Image