சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு “2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 19-ஆம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் இதை தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனவும் பட்ஜெட் கூட்டம் வருகின்ற 22ஆம் தேதி வரை நடைபெறும்” என அறிவித்தார். 1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! […]
இன்று தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர் தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகள் தற்போது ஏற்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக 11.12.2017இல் அதிமுக ஆட்சியில் 12 ஆரம்ப சுகாதர நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. […]
கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்திற்காக தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதில் தமிழக அரசு அளித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி அதனை புறக்கணித்து, சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். மேலும் ஆளுநர் பேசியது சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெறாது என்றும், அரசு கொடுத்த உரைதான் சட்டப்பேரவை நிகழ்வில் பதியப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனை அடுத்து, நேற்று முன்தினம் […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 3வது நாளாக இன்று கூடியுள்ளது. இன்று ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. அதே போல அதிமுக தரப்பின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் இன்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….
2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களை நாடினாலும் இதுவரை எந்த பலனும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா – ஆளுநர் ரவி ஒப்புதல் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் […]
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழக அரசு கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் அதனை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளே பரபரப்பானது. இன்று இரண்டாம் நாள் மற்றும் நாளை மூன்றாம் நாளில் ஆளுநர் உரையின் கீழ் விவாதம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி பதிலுரை நிகழ உள்ளது.அதற்கடுத்து தமிழக பொது […]
இந்த வருடன் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையின் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தினரின் அறிமுகத்தை வாசித்தார். அதன் பின் பாதியில் அதனை நிறைவு செய்து, இங்கு (சட்டப்பேரவையில்) தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி இரண்டு நிமிடத்தில் உரை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ரவி . இது குறித்து சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் கூறுகையில், தேசிய கீதத்தை […]
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “வருகின்ற பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எனவும் தெரிவித்தார். பின்னர் 20 ஆம் தேதி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல 21 ஆம் தேதி 2023- 24 […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்படும். ஆனால், ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டும், பல்வேறு மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியும் வந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் வைத்துள்ளார். அதனால், மசோதாக்களுக்கு […]
2023, ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் அலுவல் பணிகள் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை அலுவல் பணிகள் 2023 தொடக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அலுவல் பணிகள் தொடங்க உள்ளது . அதன் பிறகு, சட்டப்பேரவை எத்தனை நாள் சட்டப்பேரவை இருக்கும். கேள்வி நேரம், மசோதா உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு […]
மாண்டஸ் புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தமிழக சட்டப்பேரவை பொங்கல் விடுமுறை கழித்து தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையானது ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி முதல் வாரம் தொடங்கும். அதன் பிறகு பொங்கல் விடுமுறை விடப்படுவது வழக்கம் . ஆனால் வரும் 2023வது வருடம் இதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொங்கல் விடுமுறை கழித்து தான் 2023இன் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மாண்டஸ் புயலினால் […]
பயணிகளை கையாள்வதிலும், சரக்கு கையாள்வதிலும் முன்னேற்றம் அடைவதற்காக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும், 11 இடஙக்ளில் ஆராய்ந்து பின்னர் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்து புதியதாக சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு சுமார் 4790 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடுமையாக […]
சட்டப்பேரவை நேற்று இரங்கல் தீர்மானங்களுடன் நிறைவடைந்த நிலையில், இன்று, இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் அதிமுகவினர் அமளி, இரண்டு விசாரணை கமிஷன் அறிக்கைகள், ஹிந்தி எதிர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட நிகழ்வுகளோடு நிறைவடைந்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் நாள் தொடங்கி, இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. காலை இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக […]
தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக முழு மனதாக ஆதரவு தெரிவிக்கிறது. – ஓபிஎஸ் சட்டப்பேரவையில் பேச்சு. மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். […]
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவையில், பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணை தலைவராக வைக்க கூடாது. அதற்கு பதிலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் […]
2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு தொடர்பான விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு […]
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் தீர்ப்புக்கு மாறாக சபாநாயகர் செயல்படுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை படி சபாநாயகர் செயல்படுகிறார். – என தங்கள் தரப்பு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார். தமிழக சட்டப்பேரவை தொடங்கி இரண்டாவது நாளான இன்று இபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன்கலந்து கொண்டார். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் கடுமையான சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் […]
1988, 1989 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். யாருக்காகவோ கட்டுப்பட்டு இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு அமளியில் ஈடுபடுகிறீர்கள். – என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய பேரவையை புறக்கணித்த இபிஎஸ் தரப்பினர், இன்று, எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வந்துள்ளார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் […]
மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. இன்று காலை 10 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர். ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். இந்த நிலையில், எலிசபெத் ராணி, அஞ்சலை பொன்னுசாமி, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட பிரபலங்களின் மறைவுக்கும் மௌன அஞ்சலி […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரான முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மாற்ற கோரி சபாநாயகரிடம், இபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதுகுறித்து, இன்னும் சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் இபிஎஸ் […]