சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததன் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி மக்கள் வசிக்கும் பகுதிகள் சாலையோரங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அம்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார். இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு […]
ஓமலூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நவ-29) அதிமுக கள ஆய்வு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், அந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஆளுங்கட்சியாக திமுக மீது பல குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். […]
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இ.பி.எஸ் விமர்சனம் : இது குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 42 மாத காலம் ஆகி விட்டது. ஆனாலும், விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் செய்யவில்லை. நேற்று பெய்த […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த இபிஎஸ், “ஒன்றை நல்லா புரிஞ்சுக்கணும். அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும் போதுதான் அது முடிவு செய்யப்படும்” என்றார். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது […]
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம் பால்பண்ணை காவல்நிலைய எஸ்ஐ ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். அப்போது பின்னல் வந்த கார் மோதியதில் எஸ்.ஐ ஜெயஸ்ரீ சம்பவ இடத்தியிலே உயிரிழந்தார். படுகாயமடைந்த காவலர் நித்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு […]
சென்னை : நாளை அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாடு குறித்தும், அம்மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் பற்றியும் […]
சேலம் : திமுக கூட்டணி உடைந்து விடும், திமுக செல்வாக்கு சரிந்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னர் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சேலத்தில் நடைபெற்ற காட்சிக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் கூறுகையில், ” ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து மாநிலத்தின் முதலமைச்சராக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். அதற்கு உதாரணம் நான். அதேபோல திமுகவில் […]
சென்னை : இன்று (அக்டோபர் 17) அதிமுக கட்சியின் 53வது ஆண்டுவிழாவானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்கும் விவகாரம் […]
சென்னை : விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை கன்னியகுமாரி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு இழிவு படுத்தி பேசியதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும், ” ஆண்டவனால் தன நீங்கள் மாற்றுத்திறனாளியாக படைக்கப்பட்டுள்ளீர்கள் என்று அந்த ஆசிரியரை நோக்கி கடுமையான சொல்லை மகா விஷ்ணு பயன்படுத்தி உள்ளதும் கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயதுடன் நடந்துகொள்ள […]
ஈபிஎஸ்: தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று தொடங்கிய நிலையில், நேற்றைய தினம் போல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வந்தனர். அங்கு கேள்வி நேரம் முடிந்தும் நேற்றை போல, இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது என கூறி அதிமுகவினர் முழக்கமிட்டு கொண்டே பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பின் பத்திரிகையாளரை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். […]
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வரும் ஜூலை-10ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த இடைத்தேர்தலுக்காக வேட்பாளர்களை திமுக, நதாக, பாமக கட்சிகள் […]
சென்னை: ஓபிஎஸ் அணியில் இருந்து பிரிந்த புகழேந்தி, ஜே.டி.சி.பிரபாகர், கே.சி.பழனிச்சாமி ஆகியோர் தனியாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு என அணியை உருவாக்கியுள்ளனர். அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் , அக்கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி வென்றிந்த நிலையில், இந்த முறை ஒரு தொகுதி கூட வெற்றிபெறவில்லை. மேலும், ஓபிஎஸ் , பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிட்ட ராமநாதபுரத்தில் கூட […]
கோவை: மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து உள்ளது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக, பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்தால் எப்படியும் 30 தொகுதிகள் வென்று இருப்போம் எனவும், அண்ணாமலை தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அடுத்து, கோவை விமான நிலையத்தில் சேத்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 2019 தேர்தல் சமயத்தில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. அப்போது அதிமுக […]
சென்னை : கலாநிதிமாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் இபிஎஸ். தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை மக்களவை தொகுதி புரசைவாக்கம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கையில், திமுக எம்பி தயாநிதி மாறன் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 2019 தேர்தலில் வெற்றி பெற்று மத்திய சென்னை எம்பியாகவும், 2024 தேர்தலில் திமுக வேட்பாளராகவும் களமிறங்கிய தயாநிதி […]
Edapadi Palnisamy: மாநில அரசு கேட்கும் நிதியை, மத்திய அரசு வழங்கியதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இபிஎஸ்-யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, புயல், மழை பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய […]
Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இன்று […]
Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காலை 7 முதலே வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக […]
Election2024 : திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் ஊழல். – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று கரூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கடுமையாக விமர்சித்தார். அவர் நேற்று பிரச்சாரத்தில் பேசுகையில், இந்த மாவட்டத்துல ஒருத்தர் இருந்தார், பேரு செந்தில் பாலாஜி. […]