Annamalai : அதிமுக கட்சி டிடிவி.தினகரனிடம் இருந்தால் ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என அண்ணாமலை பேசியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால். தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக […]
AIADMK: எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார். அதாவது, பிரதமர் மோடியின் ரோடு ஷோவை விமர்சித்திருந்த இபிஎஸ்-ஐ நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார். பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள், தமிழ்நாடு […]
Edappadi K Palaniswami : முதல்வர் ஸ்டாலின் பொய்யை தவிர எதுவும் பேசமாட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்தார். அப்போது,அதில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியை […]
Udhayanidhi Stalin : சசிகலா காலில் சில்லறை தேடிய எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம். வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் கடந்த தேர்தலில் ஒரு மனதாக […]
EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். […]
Udhayanidhi Stalin : நான் காலில் விழுவது போல போட்டோ காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் – உதயநிதி ஸ்டாலின். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். உதயநிதி விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியும், பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு உதயநிதியும் மாறி மாறி பிரச்சார மேடைகளில் பதில் கூறி வருகின்றனர். எய்ம்ஸ் செங்கல் : அமைச்சர் […]
Election2024 : இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். வரும் மக்களவை தேர்தலை தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சியான அதிமுக இறைபக்தியுடன் எதிர்கொண்டு வருகிறது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் சென்றாய பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் . வழக்கமாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் முன்னர் சேலம் மாவட்டம் […]
Election2024 : நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியாக உள்ள அதிமுக அண்மையில் அதன் வேட்பாளர்களை அறிவித்தது. மொத்தம் 33 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அதில் திருநெல்வேலி தொகுதியில் சிம்லா முத்துசோழன் எனும் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
ADMK: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.? இதனை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதன்படி, 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலும், […]
ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததன் பெயரில் இரட்டை இலை சின்னம் என்பது அவர்களிடத்தில் உள்ளது. இதனை எதிர்த்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். Read More – தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.! ஓபிஎஸ் தரப்பு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக […]
ADMK : தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று முதல் துவங்கி உள்ளது. Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.! தமிழகத்தில் முதற்கட்டத்திலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், ஒன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் என்பதால், தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் […]
ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என இருவருமே இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக கட்சிக்கும் உரிமை கோரினர். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல்வேறு மையங்களில் இவர்கள் முறையிட்டனர். இதில் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே வெற்றி கிட்டியது. Read More – அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் […]
EPS : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை இருதரப்பு ராசுகளும் சென்றும் ஒரு சுமுகமான முடிவு ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை […]
ADMK Protest : தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என கூறி அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசு […]
Udhayanidhi Stalin : பாஜகவில் சேரப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமாக கூட இருக்கலாம் என அமைச்சர் உதயநிதி பேசினார். சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் இவ்வாறு அமைச்சர் பேசியுள்ளார். தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். Read More – பிரதமர் மோடி வருகை… விண்ணில் […]
மதுரையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும், மக்களவை தேர்தல் குறித்தும் குறிப்பிட்டு பேசினார். மதுரையில் திமுக – அதிமுக : மதுரையில் திமுக அரசு புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அதிமுக ஆட்சி காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. […]
நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. […]
இன்று ஜனவரி 17ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும் , அதிமுக தலைவருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் , ஓபிஎஸ் ஆதரவாளர்கள், டிடிவி.தினகரன், சசிகலா தரப்பினர் என பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட உள்ளோம் – டிடிவி தினகரன் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அதிமுக கொடி […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக கொடி , சின்னம் பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையியீடு மனு தள்ளுபடியானது குறித்து கேட்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது […]
நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், நான் சில விஷயங்களை வெளிபடையாக கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை சென்று விடுவார். கட்சிக்கு நான் உண்மையானாக இருந்ததன் காரணமாகவே ஜெயலலிதா […]