#Breaking:மாணவர்களின் செல்போன் திருப்பி தரப்படாது;9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத்

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும்அமைச்சர்அன்பில்மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்:

“மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போனை கொண்டு வரக்கூடாது, மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் தரப்பட மாட்டாது.இதனிடையே,பள்ளிகளில் சேர மாற்றுச்சான்றிதழை தருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.மாற்றுச்சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது.அதே சமயம்,மாற்றுச்சான்றிதழ் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இதனிடையே வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும்,இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்பட்டு,பின்னர் படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும்”, என்று தெரிவித்துள்ளார்.

#Breaking:மாணவர்களின் செல்போன் திருப்பி தரப்படாது;9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!