போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு. சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4ஆவது நாளாக அரசு பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று அமைச்சருடன் நடக்க உள்ளது.
தொடர் உண்ணவிரோத போராட்டத்தால் இதுவரை 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு என தகவல். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார் எனவும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் உண்ணவிரோத போராட்டம் தொடரும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், சென்னையில் தொடர் […]
ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல். சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 3ஆவது நாளாக உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு […]
பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பனி நிரந்தரம் செய்யக்கோரி 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றுள்ளார். எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் […]
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிப்பு. வரும் 28 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (BT Deployment Counselling) மட்டும் நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். இக்கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23 கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (BT & IPG Staff Fixation) நிர்ணயம் […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 7,500 ரூபாயிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் பணிநியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதற்கு,TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,இல்லம் தேடி […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET) கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.அதே சமயம்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே,சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.அதன்பின்னர்,நடப்பு […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி,அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.12,000 தொகுப்பூதிய […]
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதாவது, 7,55,998 மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில்,பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று,10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில்,8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி […]
ஆசிரியர்களுக்கு வரும் 18-ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்த 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்புக்கு 20ம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறந்ததை அடுத்து, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “மாணவர்கள் […]
தமிழகத்தில் கடந்த 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.குறிப்பாக,அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,3000 ஆசிரியர்களுக்கு ஊதியம்,மற்றும் இதர படிகளை வழங்கிடவும் […]