தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “மாணவர்கள் […]