பங்களாதேஷ் : வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது, நேற்று மட்டும் 52 […]
சென்னை : 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார். தவெக சார்பில் 2வது ஆண்டாக நடைபெறும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காலை முதலே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை புரிந்து வருகிறார்கள். திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. […]
சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு மற்றும் வெப்பம் அதிகரிப்பு காரணமாக, ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. ஆண்டுதோறும், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து […]
10th Exam : தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதுபோன்று, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி […]
Karnataka: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மங்களூரு நகருக்கு அருகில் உள்ள கடப்பாவில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது தெரிய வந்துள்ளது. READ MORE – பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி கல்லூரியின் வளாகத்தில் பல்கலைகழகத்திற்கு முந்தைய பாடப்பிரிவு (பியுசி) தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது, இந்த […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று அங்கு சென்றுள்ளார். இந்த சூழலில், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் ரவி, இன்று துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறி பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சேலத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு […]
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்க காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், […]
கடந்த 11-ஆம் தேதியே அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.! அதன்படி, இன்று தொடங்கி டிசம்பர் 22-ம் […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் குமரிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு 8 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இன்று 10 […]
2023-24-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி கலை, மனித நேயம் (ம) சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த […]
தமிழ்நாட்டில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிஎஸ்ஆர் நிதியில் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆய்வகங்கள் […]
நிறுவனங்களின் 3 ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் 3 ஆண்டுகள் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் 3 ஆண்டுகள் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மாநில அரசுகள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வேலைவாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் […]
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில் Flipkart மற்றும் Amazon நிறுவனங்களுக்கு நோட்டீஸ். டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக Flipkart மற்றும் Amazon நிறுவனங்கள் ஆன்லைனில் ஆசிட் விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள துவாரகாவில் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது பள்ளி (12ம் வகுப்பு) மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் […]
4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் என்று யுஜிசி அறிவிப்பு. இதுதொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்.டி படிப்பைத் தொடரலாம் என்றும் மூன்று ஆண்டு படித்தவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் வழங்குவதா அல்லது நான்கு ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பை வழங்குவதா என்பதை பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 4 ஆண்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் […]
சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நேற்றிரவு இரவு 48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 16 மற்றும் 17 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை […]
மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. EMIS-ல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களில் தவறு இருந்தால் டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் திருத்தவும் பள்ளிக்கல்வித்துறை […]
போதைப்பொருட்களுக்கு எதிரான சோதனையின் போது பெங்களூருவில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பல்வேறு விதமான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் போதைப்பொருள் கலாச்சாரம் சற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதற்கு சாட்சியாக முன்பில்லாத அளவுக்கு பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருள்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர். இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பெரும்பாலும் படிக்கும் மாணவர்களும், படித்த இளைஞர்களும் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அப்படித்தான் […]
6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல். உச்சநீதிமன்றத்தில், ஜெயாதாகூர் என்பவர் 6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் சானிட்டரி நாப்கின்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் மாதவிடாய் கால சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும் அந்த […]
ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து. பிள்ளைகள் மீதான கடமை, பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் பேண செய்யும் ஆசிரியர்களை குறை சொல்ல கூடாது. ஆசிரியர்களை குறை சொன்னால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்யமாட்டார்கள். எனவே, மாணவர்கள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஆசிரியர்கள் மீது புகார் […]
பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு. பேருந்து படிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]