போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு. சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4ஆவது நாளாக அரசு பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று அமைச்சருடன் நடக்க உள்ளது.
தொடர் உண்ணவிரோத போராட்டத்தால் இதுவரை 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு என தகவல். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார் எனவும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் உண்ணவிரோத போராட்டம் தொடரும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், சென்னையில் தொடர் […]
ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல். சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 3ஆவது நாளாக உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு […]
அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என மத்திய தர்மேந்திர பிரதான் அறிவிப்பு. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய 12-வது பள்ளி உளவியல் சர்வதேச மாநாட்டில் பேசிய மத்திய கல்வி, திறன் மேம்பாடு தொழில் முனைவோர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கொரோனா பெருந்தொற்று நேரத்தில், தொலைநோக்கு பார்வையுடன் பல முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார். அதனை திடமாக செயல்படுத்தியதால், கொரோனா தடுப்பூசியில் இன்று தன்னிறைவு பெற்றுள்ளோம். 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகை […]
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து,10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று (24-ம் தேதி) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பள்ளிகள் வாயிலாக இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.இதனிடையே,11 ஆம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “மாணவர்கள் […]
ராமநாதபுரம்:சாயல்குடி அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள வாகைக்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரையின் கட்டை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கட்டை தலையில் விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,அவர்கள் இருவரையும் சாயல்குடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நான்காம் […]
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் வேளாண் கூட்டுறவு கடன் தொகையை விவசாயிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பு. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு எவ்வளவு என்பது பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஒரு குழுவை தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டது. இதையெடுத்து, இன்று கலையரசன் தலைமையிலான குழு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.