தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “மாணவர்கள் […]
வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.இதனைத் தொடர்ந்து, மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 10 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கம் செய்து நேற்று அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்,வேலூரில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,உத்தரவை […]
பாகிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள அனைத்து பெண்கள் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் மாணவிகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும்,பல்கலைக்கழக வகுப்பு நேரங்களின் போது மாணவர்கள் அதிக நேரம் சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர்.இது அவர்களின் கல்வி, நடத்தை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை பாதிக்கிறது.எனவே, பல்கலைக்கழக நேரங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மீது […]
இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.மேலும்,ஏதேனும் அவசர காரணம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: தேவையின்றி செல்போனில் அரட்டை- எச்சரிக்கை: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரிய […]
இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரியவிதிகளை வகுக்க […]
சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது, பாதுகாப்பாகவும் விழிப்புடனும் ஓட்டுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக காவல்துறை வாகனம் ஓட்டும் செல்போனை தவிர்க்குமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவிட்டு, ‘வாகனம் ஓட்டும் போது செல்போனை தவிர்க்கவும் சாலையில் நம்முடன் பயணிப்பவர்களின் கனவுகளை¸ நம்முடைய ஒரு நிமிட கவனக்குறைவு அழித்துவிடும். கைப்பேசியில் இருந்து உங்கள் கவனத்தை நீக்கி சாலையில் செலுத்துங்கள். […]
இங்கிலாந்து விஞ்ஞானிகள் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின்,பிரிஸ்டலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மனித கழிவுகளை(யூரினை) மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை (battery) உருவாக்கியுள்ளது.இதன்மூலம்,செல்போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் அதை ஒருநாள் முழு வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த விரும்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் ‘பீ பவர்’ திட்டம் முதன்முதலில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது, அங்கு விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் […]
காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டே சென்று கிணற்றில் விழுந்த இளைஞர் மறுநாள் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்.பணி முடிந்த பின் இரவு நேரங்களில்,தான் பணிபரியும் நூற்பாலை அருகில் உள்ள கிணற்றுப் பகுதிக்கு அருகே சென்று காதலியுடன் செல்போனில் பேசி வந்தார். இந்த நிலையில்,வெளிச்சம் மற்றும் சுற்றுசுவர் இல்லாத கிணற்றுப்பகுதி அருகே காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆசிக், எதிர்பாராதவிதமாக […]