#BREAKING: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள சீக்கியர்களை மீட்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!!

Punjab Chief Minister Amarinder Singh has called on the central government to rescue more than 200 Sikhs in Taliban-held Afghanistan.

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட சீக்கியர்களை மீட்க மத்திய அரசுக்கு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தலிபான் கைப்பற்றியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாராவில் சிக்கியுள்ள சுமார் 200 சீக்கியர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பஞ்சாப் அரசு, அவர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதிப்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

unknown node