Afghanistan: ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தாலிபான்கள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு அங்கு ஆட்சியை கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் எப்போதும் நிலவும் வகையில் உள்ளது. ஏனென்றால், தாலிபான்களின் ஆட்சியில் பல்வேறு விதிமுறைகள், அறிவிப்புகள் வந்த […]
ஆப்கானிஸ்தானில் தடையை மீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற பெண்களை தலிபான்கள் தடுத்தி நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க தலிபான்கள் அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் உயர்கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் பெண்களே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் தாலிபான்கள் விதித்த தடையை மீறி பெண்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், பல்கலைக்கழக வாயிலிலேயே தாலிபான்கள் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். என […]
பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து பல்கலைக்கழகத்தில் பெண்கள் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரல் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து […]
பெண்களை பல்கலைக்கழகங்களில் இருந்து தடை செய்யும் தலிபானின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்கா கண்டனம். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் நேற்று உத்தரவிட்டுள்ளனர். ஆப்கன் உயர்கல்வித்துறை அமைச்சகம் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவை அனுப்பியது. தலிபான்களின் இந்த முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலிபான்களின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் தலிபான் அரசு இதனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இது […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தலிபான் தலைவரின் கல்லறை இருக்குமிடம் குறித்த உண்மையை தற்போது தலிபான்கள் வெளியிட்டுள்ளனர் தலிபான்கள் இயக்க தலைவர் முல்லா ஒமர், 2013 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் என தலிபான்கள் 2015இல் அறிவித்தனர். ஆனால் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் தலைவர் முல்லா ஒமரின், கல்லறை இருக்குமிடத்தை தலிபான் தெரிவித்துள்ளது. தலிபான் தலைவர் முல்லா ஒமரின் கல்லறை, ஆப்கானிஸ்தான் நாட்டின் சாபுல் பகுதியிலுள்ள சூரி மாவட்டத்தில் இருப்பதாக தலிபான் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது […]
காபூலில் மசூதிக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மசூதிக்கு அருகே ஒரு வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. […]
பாகிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள அனைத்து பெண்கள் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் மாணவிகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும்,பல்கலைக்கழக வகுப்பு நேரங்களின் போது மாணவர்கள் அதிக நேரம் சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர்.இது அவர்களின் கல்வி, நடத்தை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை பாதிக்கிறது.எனவே, பல்கலைக்கழக நேரங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மீது […]
கடந்த ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து,பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த புனித வெள்ளியன்று பாகிஸ்தான் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குழந்தைகள் உட்பட சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. பாகிஸ்தான் தூதர் வருகை: இதைத் தொடர்ந்து,ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் படைகள் நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக காபூலில் உள்ள பாகிஸ்தான் […]
ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதி: அதனை உறுதி செய்யும் வகையில்,ஹெராட் நகரின் PD 12 இல் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, 25 பேர் காயமடைந்தனர் என […]
ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்தின்படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிப்பு. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்: ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, கொரோனாவால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. புதிய கல்வியாண்டு: ஆப்கானிஸ்தானில் புதிய கல்வியாண்டு துவங்கி உள்ளதால், […]
உக்ரைன் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். அமைதியான முறையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க கோருகிறோம் என தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரில் இதுவரை உக்ரைனைச் சேர்ந்த 137 பேர் ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்துள்ளனர். பல ரஷ்ய விமானங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து தாலிபான் தலைமையிலான […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைக்கும் போது, அந்நாட்டை விட்டு வெளியேறியது குறித்து முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம். ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. அமரிக்க வீரர்களுக்கு ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர் பணம் இழக்க நேரிட்டதால் படைகளை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் படிப்படியாக சொந்த நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர். இதுதான் சரியான தருணம் என்ற எண்ணத்தில் ஆப்கானிஸ்தானில் ஒடுங்கி இருந்த தலிபான்கள் […]
தாலிபான்களை ஆதரிப்பது பெண்களையும், புத்தரையும் அவமதிப்பதற்கு சமம் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் சமாஜிக் பிரதிநிதி சம்மேளம் எனும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தலிபான்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பதாக ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கௌதம புத்தரின் சிலையை தலிபான்கள் அழித்ததாகவும், […]
காபூலில் இரண்டு குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை மற்றும் அதன் அருகே இன்று இரண்டு குண்டு வெடிப்பு வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாகவும்,சாட்சியங்கள் சிலர் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும்,காபூலில் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் […]
தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் உள்ள பிற நாட்டு மக்கள் மற்றும் அந்த நாட்டை சேர்ந்த பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தலிபான்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு […]
ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசுப்படை வீரர்கள் உட்பட 13 பேர் தாலிபான்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்த பிற நாட்டவர் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான அடக்கு முறையும், அராஜகமான சில செயல்முறைகளும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. மேலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரக்கூடிய ஆயுதமேந்திய குழுக்களையும் […]
காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்வில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்,எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலை படையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில்,தற்கொலை படைக்கு லஷ்கர்-இ-மன்சூரி (‘மன்சூர் இராணுவம்’) என்று பெயரிடப்பட்டு,நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் […]
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி,தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக,ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது. இதற்கிடையில்,ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15 அன்று காபூலை விட்டு வெளியேறினார்.பின்னர் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார்.மேலும்,லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் […]
காபூல் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்பட்டதையடுத்து 70 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காபூல் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி படித்த துணைவேந்தர் முஹம்மது ஒஸ்மான் பாபுரியை தலிபான்கள் பதவி நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக பிஏ பட்டம் பெற்ற முஹம்மது அஷ்ரப் கெய்ரத்தை நியமித்தனர். இதனையடுத்து,காபூலை தளமாகக் கொண்ட மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அஷ்ரஃப் கயரத் நியமிக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,கடந்த ஆண்டு அஷ்ரப் கெய்ரத்தின் ஒரு ட்வீட்டை விமர்சகர்கள் முன்னிலைப்படுத்தினர்,அதில் அவர் ஒரு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தினார். இதற்கு […]