டெல்லி ல் :மோடி மிகச்சிறந்த பிரதமர் என்றும், அவருடனான தனது நட்பு எப்போது தொடரும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். அதிகப்படியான வரிகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக வாஷிங்டன் மற்றும் டெல்லி இடையே தற்போதைய பதட்டங்களுக்கு மத்தியில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
இந்நிலையில், இந்தியா உடனான உறவு குறித்து சாதகமான மனநிலையை வெளிப்படுத்திய டிரம்பை பாராட்டுவதாக மோடி தெரிவித்துள்ளார். டிரம்ப் கொண்டுள்ள மனநிலையை போலவே இந்தியாவும் அமெரிக்காவுடன் சாதகமான உறவை தொடர விரும்புவதாகவும் மோடி கூறியுள்ளார். இதனால், இருநாடுகளிடையே மீண்டும் நெருக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில். ”இந்தியா – அமெரிக்கா உறவு குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உணர்வு, நேர்மையான மதிப்பீட்டுக்கு பாராட்டுகள்;. இரு நாடுகளும் மிகவும் நேர்மறையான, எதிர்கால நோக்குடைய உலகளாவிய கூட்டாண்மையை கொண்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node