‘எலான் மஸ்க் ஒரு மோசமான கலைஞன்’ – டொனால்ட் டிரம்ப். ‘அவரை நான் வெறுக்கவில்லை. ட்ரம்ப் தற்போது மணல் காற்றில் நடந்து ஓய்வெடுக்கும் தருணம்.’ – எலான் மஸ்க். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது யாரிடமாவது வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொள்வதை வழக்காமாகவே வைத்துள்ளார். பல்வேறு இடங்களில் இதனை செய்துள்ளார். அண்மையில் இவர் பேசிய ஒரு வீடியோ வைரலானது, அதில் இவர் பேசுகையில், டெஸ்லா நிறுவன சி.இ.ஓ எலான் மஸ்க்கை, அவர் மற்றுமொரு மோசமான கலைஞன் […]
புதிய அரசியல் கட்சியை தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்கள் போலியானது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ட்ரம்ப் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின், முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின், ஓர்லாண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்கலந்து […]
விமானத்தில் இருந்து இறங்கிய ட்ரம்ப் கைகள் அசைத்து போஸ் கொடுத்துள்ளார். ட்ரம்ப் மனைவி இறங்கிய வேகத்தில் நடந்து சென்றுள்ளார். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் அவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் டிரம்ப் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. விழாவை புறக்கணித்துவிட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய அவர், ப்ளோரிடாவில் அவரது மனைவி மெலனியா உடன் விமானத்திலிருந்து இறங்கி வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த புகைப்படக்காரர்கள் மத்தியில், கைகளை அசைத்து போஸ் கொடுத்தார். ஆனால் […]
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப், புளோரிடாவில் பாம் பேச்சின் கரையோரத்தில் உள்ள ஒரு தீவில் உள்ள மார்-எ-லாகோ பண்ணை வீட்டில் வசிக்கவுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இவர் 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் […]
அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை தொடர்ந்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து சென்றார். அதனை சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பங்கமாக கலாய்த்தார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து, இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இவர் ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக சிறுமி கிரெட்டா விமர்சித்து […]
அமைதி பாதுகாப்பு வளத்திற்கான நல்ல நண்பனாக அமெரிக்கா விளங்கும் என்று தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப் அவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனாலும் அவர் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் அவர்கள் கூறுகையில், புதிய வரலாறு படைப்போம் என […]
அமெரிக்கா வரலாற்றிலேயே பதவி நீக்க தீர்மானத்தின் அடிப்படையில் முதன் முறையாக அதிபர் டிரம்ப்புக்கு பதவி நீக்கம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த தேர்தலில் நான் தான் ஜெயிப்பேன் என டிரம்ப் கூறி வந்ததால், அவரது தோல்வியை அவர் தற்பொழுது வரையிலும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்நிலையில், வருகின்ற 20 ஆம் தேதி டிரம்ப்பின் பதவி […]
வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டதால் ஒரு வாரத்திற்கு ட்ரம்பின் Donald j.Trump என்ற சேனலுக்கு யூடியூப் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதற்கு முன் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனம் ட்ரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்ய கடந்த 7-ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது […]
அமெரிக்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் , டிவிட்டர் ஃபேஸ்புக் பக்கங்களில் டொனால்டு டிரம்ப் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ பதிவு வன்முறையை தூண்டும் வகையில் இருந்து இருப்பதாக கூறி அவரது சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து டொனால்டு டிரம்ப் ட்விட்டர் 12 மணி நேரமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் 24 நேரம் முடக்கப்பட்டன. இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் […]
தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கும் அதிபர் ட்ரம்ப், தடுப்புகளை மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள். ரொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை அத்துமீறி முற்றுகையிட்டதை அடுத்து, அதிபர் பதவில் இருந்து நீக்குவது குறித்து அந்நாட்டு அமைச்சரவையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடமைகளை நிறைவேற்ற அதிபர் தவறினால் நீக்குவதற்கு அமெரிக்க அரசியல் சட்டத்தின் 25-வது திருத்தும் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பெட்ரா ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு அதிகார […]
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாமல் ட்ரம்பும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பொய்யான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்கள் போராடுவது எதிர்பார்த்த ஒன்றுதான். நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம். இது நிச்சியம் வரலாற்றில் இருக்கும் என முன்னாள் அதிபர் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டு, தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளைமாளிகையில் தேர்தலில் வெற்றி […]
வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெறும் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. அமெரிக்க அதிபர் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ […]
ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் புகுந்ததால் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் நேற்று அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றபோது திடீரென கட்டிடத்திற்கு வெளியே ட்ரம்பின் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டனர். மறுபக்கம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் […]
பல்வேறு துறைகளில் ட்ரம்பின் நிர்வாகம் தங்களது குழுவினருக்கு முழுமையான தகவல்களை வழங்க மறுப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டிரம்ப் அவர்களை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவர் ஏற்கனவே ட்ரம்பின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவர் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் […]
தனது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்று அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம், இன நீதி வரை நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. அடுத்தாண்டு சீக்கிரம் வரட்டும், வீணடிக்க நேரம் இருக்காது. அதனால்தான் நானும் எனது அணியும் முதல் நாளில் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம் என்று பைடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காலவரையறை […]
அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவித்துள்ளார். அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவித்துள்ளார். இந்த விருதினை அமெரிக்காவுக்கான இந்திய தூதர், பிரதமர் மோடியின் சார்பில் இந்த விருதினை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடம் பெற்றுக்கொண்டுள்ளார். பிரதமர் […]
ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டவிரோதி. ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை, ஜனநாயக கட்சி வேட்பாளரான பைடன் வென்றுள்ளார். இதனை அடுத்து, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சட்டவிரோதி என்று அழைத்தார். மேலும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து […]
அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றார். தனது தோல்வியை ஏற்காத டிரம்ப், தேர்தலில் தோல்வியடையவில்லை எனவும், தேர்தலில் மோசடி குற்றச்சாட்டுகள் நடந்துள்ளது என கூறிவருகிறார். டிரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில், ஜோ பிடனின் வெற்றியை மாற்றியமைக்க முயன்ற குடியரசுக் கட்சியினரின் மனுக்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு […]
அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடும் போது தவறி விழுந்ததில், காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வரும் ஜனவரி மாதத்தில் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது பைடனுக்கு 78 வயதாகிறது. இந்நிலையில், ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு டைகர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பைடன், டைகருடன் விளையாடும் போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து […]
அமெரிக்காவில் கொரோனாக்கு எதிரான தடுப்பூசி விநியோகம், அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்குடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கு எதிராக தான் கண்டுபிடித்த […]