திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பது போல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்கிறது என தமிழகத்தில் திமுக, அதிமுக , விசிக, காங்கிரஸ், நாதக, தவெக என அனைத்து கட்சியினருமே எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். அன்பில் […]
டெல்லி : இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1993ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்ததது. பாஜக ஆட்சி காலத்தில் சாகிப் சிங் வர்மா, மதன் லால் குரானா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர். அதன்பிறகு, 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து முடிந்த தேர்தலில் 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக ரேகா குப்தா தேர்வு பாஜக […]
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதியே ரிசல்ட் வெளியாகி இருந்தாலும், இன்று வரை அம்மாநில முதலமைச்சர் யார் என்பது தெரியாமல் இருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் முடிந்த பிறகு இதற்கான ஆலோசனை இருக்கும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பபை உயர்த்தி அதன் மூலம் நாட்டின் வருவாயை பெருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இறக்குமதி வரி : இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில், அவரை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான […]
கோவை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பற்றியும் , எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைவது பற்றிய கருத்துக்களுக்கும் பதில் அளித்து பேசியிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான முந்தைய சந்திப்பு பற்றியும் அவர்கள் கூறியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ” அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) நானும், எடப்பாடி பழனிசாமியும் அங்கம் வகித்தோம். அப்போது கூட்டணி […]
டெல்லி : கடந்த 2013 (48 நாட்கள்), 2015, 2020 முதல் 2025 வரை டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி 2025 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் வெளியானாலும் இன்னும் முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை பாஜக தலைமை வெளியிடவில்லை. அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் […]
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் 26வது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு திடீரென தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை மத்திய […]
டெல்லி : அமெரிக்காவில் பிரதமர் மோடி, எலான் மஸ்க் இடையே சந்திப்பு நடைபெற்றிருந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது LINKEDIN பக்கத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர் மற்றும் பேக்-எண்ட் குழு என 13 வெவ்வேறு பணிகளுக்கு ஆட்களை தேடுவதாகப் பதிவிட்டுள்ளது. டெஸ்லாவின் இந்த நடவடிக்கை இந்திய சந்தையில் அதன் நுழைவைக் குறிக்கிறது. STARLINK சேவைக்காகப் பெங்களூரில் அலுவலகம் துவங்கப்பட்ட நிலையில், டெஸ்லா செயல்பாடுகளை மும்பை […]
மாசசூசெட்ஸ் : ஹார்வர்ட் இந்தியா மாநாடு பிப்ரவரி 18-ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விண்ணப்பகர்கள், மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்களும் பங்கேற்று இந்தியாவின் வளர்ச்சிகள் குறித்தும் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது பற்றியும் பேசுவார்கள். அப்படி தான் இந்த முறை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் நீதா அம்பானி கலந்து கொண்டு பேசியதோடு நகைச்சுவையாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மாநாட்டில் கேள்வி-பதில் அமர்வில், ஒருவர் நீதா அம்பானியிடம் இந்திய பிரதமர் […]
வாஷிங்டன் : பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உள்ளிட்ட முக்கிய அமெரிக்கா அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களை சந்தித்தார். அதனை தொடர்ந்து, பன்னாட்டு தொழிலதிபரும், அமெரிக்காவின் அரசு செயல்துறையான DOGE அமைப்பை வழிநடத்தும் நபராகவும் உள்ள எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பானது, வாஷிங்டன் பிளேர் ஹவுஸில் நடைபெற்றது. அப்போது மஸ்க் தனது 3 குழந்தைகளுடனும் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மஸ்கின் நியுராலிங் (Neuralink ) […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, அங்கு வாழும் மக்களுக்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரசனைகளை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலை சந்தித்தார் டொனால்ட் டிரம்ப். தற்போது வெற்றிபெற்ற பிறகு அதற்கான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு தற்போது வரி விகிதங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளார். எவ்வளவு வரியோ, அதே அளவு வரி…, அதாவது, அமெரிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு அரசு என்ன இறக்குமதி வரி […]
சென்னை : அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு வர்த்தக உறவுகள் முதல் பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொண்டனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சிஆர்பிஎப் வீரர்கள் , காவலர்கள் என […]
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்க புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி துளசி கபார்ட்டை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். சந்திப்பு : வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் […]
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது பாரிஸில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் அந்த மாநாட்டை தலைமை தாங்கி உரையாற்றினார். அதன் பிறகு பிரான்ஸ் அதிபருடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) அமெரிக்கா வாஷிங்டன் சென்ற பிரதமர் […]
சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க தேசிய புலனாய்வு குழு தலைவர் துள்சி கப்பார்டு உடன் வாஷிங்டன் டி.சியில் சந்திப்பை நிகழ்த்தினார். அவருடன் இந்தியா – அமெரிக்கா உறவுகள் பற்றி ஆலோசித்ததாக தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்த […]
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற பாரிஸ் AI உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் தலைமை தாங்கி உரையாற்றினார் என்பது குறிப்பிட தக்கது. இந்த நிகழ்வில், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உருசுலா வான் டெர் லேயன், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி […]
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, எலிசி அரண்மனையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அளித்த வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாநாட்டிலும் கலந்துகொண்டார். AI உச்சி மாநாடு செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு 2025, பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி […]
சென்னை : இன்று (பிப்ரவரி 11) தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் முருக பக்தர்கள் லட்சக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர். பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். மதுரை மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, அவர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் கலந்துரையாடுவார். இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட மோடி, இரு நாடுகள் உடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலில், பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் AI (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காகவும், பிரான்ஸ் – இந்தியா உறவை மேம்படுத்தும் நோக்கிலும் பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பன்னாட்டு தலைவர்கள் : இந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உடன் இணைந்து துணையாக AI மாநாட்டை தலைமை தாங்குவதற்கும் பிரதமர் மோடி சென்று மாநாட்டில் […]