டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரை ஓட்டியுள்ள தாய்லாந்திலும் பல அடி உயர கட்டடங்கள் சரிந்துவிழுந்தன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதாவது, நிலநடுக்கம் காரணமாக இணையதளம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு குறித்த […]
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார். எக்ஸ், முகநூல் போன்ற அம்சங்களை கொண்ட ‘ட்ரூத் சோஷியல்’ மீடியாவை அமெரிக்க மக்கள் அதிகமானோர் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். அதைப்போல, வேறு நாட்டை சேர்ந்தவர்களும் ட்ரம்ப் உடன் நெருங்கி நட்பில் இருக்கும் அரசியல் தலைவர்களும் இந்த சமூக ஊடகத்தில் இணைந்து வருகிறார்கள். அப்படி தான் இந்திய பிரதமர் மோடியும் ‘ட்ரூத் சோஷியல்’ இணைந்த முக்கிய உலகத் […]
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என தெரியவந்ததாகவும் வெளியான தகவல் தான் ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக வெடித்துள்ளது. இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் ஆதாரம் இருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பி பாஜகவை விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார். இது […]
டெல்லி : பிரதமர் மோடி அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில் கலந்து கொண்டபோது பல விஷயங்களை பற்றி பேசினார். உதாரணமாக முன்னாள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குறித்தும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் நடந்த சந்திப்பின் போது நடந்த சம்பவங்களை பற்றி நினைவு கூர்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் ஒருமுறை அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு சென்றபோது டொனால்ட் டிரம்ப் உடன் சேர்ந்து “ஹவ்டி மோடி” என்கிற […]
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, நாளை (மார்ச் 12 ஆம் தேதி) நடைபெறும் மொரீஷியஸின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்தியப் பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை மொரீஷியஸ் சென்றடைந்த இந்திய பிரதமர் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா, மெக்சிகோ, கனடாவுக்கு 25% சுங்க வரியை விதிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அமெரிக்காவின் உள்நாட்டு தொழில்கள் பாதுகாக்கப்படும் என்பதால் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரியை விதிக்க தான் முடிவு செய்திருப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியாவும் அமெரிக்காவுக்கு அதிகம் வரிவிதிப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்க நானும் அவர்கள் எவ்வளவு […]
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். விழாவில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை விமானம் மூலம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை வந்தடைந்தாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக தக்கோலம் சிஐஎஸ்எப் மண்டல பயிற்சி மையத்துக்கு சென்ற அவர் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் […]
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு பாதுகாப்பகத்தில் (Gir Wildlife Sanctuary) சிங்க சஃபாரியில் (Lion Safari) பங்கேற்றார். ஜிர் காடு ஆசிய சிங்கங்களின் ஒரே தாயகம் என்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளை நேரில் பார்வையிட்டு புகைப்படமும் எடுத்தார். ஒருகாலத்தில், ஆசிய சிங்கங்கள் இந்தியா முழுவதும் காணப்பட்டன. ஆனால், காற்றில் இருக்கும் மற்ற விலங்குகள் வேட்டையாடுகிறது என்பதாலும், காட்டுப்பகுதிகள் குறைதல் போன்ற […]
டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி மொழி குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் பன்முக மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கிறது. மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவித்து வருகிறது. “இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு […]
சென்னை : தலைநகரான டெல்லியில் இன்று (பிப்ரவரி 17)-ஆம் தேதி அதிகாலை 5:36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை விடுவிக்காதது, மும்மொழிக்கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து இந்தியா […]
டெல்லி : நியூடெல்லியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் இன்று அதிகாலை 5:36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் , குறைந்த அளவில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலநடுக்கம் டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, குர்கான் மற்றும் பல புறநகரப் பகுதிகளில் உணரப்பட்டது […]
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இதையொட்டி, ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் […]
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட பாஜக வெற்றியை பதிவு செய்துவிட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், வெற்றியை உறுதி செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று திங்கள் கிழமை மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில விஷயங்களை குற்றம் சாட்டி வெளிப்படையாகவே பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே […]
டெல்லி : 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தின்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நின்று பிரதமர் மோடி சில விஷயங்களை பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது பற்றி பார்ப்போம். அதில் பேசிய பிரதமர் மோடி ” […]
சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவரைப்போல முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அந்த வகையில், த.வெ.க.தலைவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட […]
டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். வழக்கம்போல, இந்தமுறையும் குடியரசு விழா டெல்லி ராஜ்பாத் (கடமைப் பாதை) பகுதியில் தான் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய உடையான மகாத்மா காந்தி ஜாக்கெட் அணிந்து கொண்டு வருகை தந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், […]
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ” பா.ஜ.க.வைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது… நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும்! இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் ” தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா […]
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான ‘இசட்-மோர்’ (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சுரங்கப்பாதை குளிர்காலங்களில் சோனாமார்க் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான அணுகலை உறுதிசெய்கிறது. பனிமூட்டம் காரணமாக சாலைகள் மூடப்படும் பிரச்சினையை தீர்க்கும் என்ற நம்பிக்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சோனாமார்க் சுரங்கப்பாதையின் பணிகள் மே 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பொருளாதார சவால்கள் காரணமாக 2018ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் திட்டம் அந்த சமயம் நிறைவேற […]