சென்னை :தமிழக கவர்னர் ரவி, ”தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. நமது சகோதரிகளும், மகள்களும் வீட்டை வீட்டு வெளியே சென்று வர பயப்படுகிறார்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஆளுநருக்கு தமிழர்களின் மீது என்ன வெறுப்பு? என திமுக எம்.பி. கனிமொழி கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், ”தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான்.
மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node