சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சிலர் சதி செய்துவிட்டார்கள் […]
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இந்த மாநாட்டுக்கு மொத்தம் 49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, […]
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். தற்பொழுது, துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானம் மூலம் ஜெகதீப் தன்கர் கோவை வருகிறார். இந்த நிலையில், உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக அறிவித்த சில நிமிடங்களில், தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் புறக்கணிப்பாதக அறிவித்துள்ளனர். அதன்படி, மனோன்மணியம் […]
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு ஆளுநர் மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் மசோதா அண்மையில் சட்டமான நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை அழைத்து துணைவேந்தர்கள் மாநாடு நடத்துகிறார் ஆர்.என்.ரவி. இதில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், 4ஆம் ஆண்டாக […]
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அம்பேத்கர் பற்றியும் அவர் எழுதிய அரசியல் சாசனம் பற்றியும் பேசினார். அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டங்கள் பற்றி பேசுகையில், அண்மையில் உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசுகையில், ” நமக்கு பைபிள், […]
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறுகிறார் எனக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆளும் திமுக அரசு வரவேற்பு தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பு […]
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இதற்கு கடந்த 8-ம் தேதி, “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக […]
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே சட்டப்பேரவையில் அரசு அளிக்கும் உரையை வாசிக்க மறுப்பது முதல் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது வரையில் பல்வேறு செயல்பாடுகளை ஆளுநர் மேற்கொண்டு வந்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை குறிப்பிட்டு, ஆளுநர் , மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால அவகாசம் […]
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி, 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என்றும் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே […]
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார். துணை வேந்தர் நியமனங்களில் சட்டத்தை மீறி செயல்படுகிறார், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நியமிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. அதில், மாநில […]
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காச நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது புத்தகமான “ஒரு கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற நூலை ஆளுநரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டார். அவர் பேசுகையில், […]
சென்னை : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடிகர் அஜித், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) இந்த விருதை அறிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில், நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டைச் […]
சென்னை : தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதப்படுத்துகிறார். ஆளுநர் திருத்தம் சொல்லி இரண்டாவது முறையாக அனுப்பப்படும் மசோதாவுக்கு கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அதனையும் வருடக்கணக்கில் கிடப்பில் போடுகிறார். இதனால் மசோதா காலாவதி பல்வேறு குற்றசாட்டுகளை ஆளுநர் ரவி மீது தமிழக அரசு தரப்பு முன்வைத்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி […]
சென்னை : இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் மகாத்மா காந்தி சிலை/புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை எழும்பூரில் உள்ள காந்தி சிலைக்கு கிழே உள்ள புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை குறிப்பிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை கிண்டி பூங்காவில் உள்ள […]
சென்னை : 2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். ஆனால், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் முதலில் அறிவித்ததை தொடர்ந்து, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இருப்பினும், இம்முறை கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், திமுக விருந்தில் பங்கேற்பது குறித்து […]
சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. வருகின்ற (ஜனவரி 26 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றி தாக்கல் செய்யப்பட்ட இச்சட்ட மசோதா அன்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், […]
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கி, நேற்று (11ம் தேதி) வரையில் நடைபெற்றது. முதல் நாளில், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்தனர். அதிலும் குறிப்பாக, “சட்டப் பேரவைக்கு ஆளுநர் வருகிறார், ஆனால் உரையாற்றாமலே போய்விடுகிறார். அதனால்தான் அவரின் […]
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடன் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை. தேசிய கீதத்தை தமிழக அரசு தொடர்ந்து அவமதிக்கிறது என ஆளுநர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதே போல, தமிழக அரசு சார்பில் கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுவது மரபு என்றும், சட்டப்பேரவை முடியும் போது […]
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். இந்த, முறையும் அதற்கேற்றாற்போல, மாநில அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வசித்து கூட்டத்தொடர் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். முதலில், தான் தேசிய கீதம் […]