ஒடிசா: ஒடிசா மாநிலத்தில், மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலப்பேரவையின் 147 இடங்களிலும் தேர்தலானது நடைபெற்றது. இதில் 78 இடங்களை கைப்பற்றி பாஜக தனி பெருபான்மையுடன் முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்களின் கூட்டமானது புவனேசுவரத்தில் நேற்றைய நாள் (ஜூன்-11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு மனதாகவே முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கியோஞ்சர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வான சரண் மாஜீ பழங்குடியின சமூகத்தை […]
Tamilisai Soundararajan: ஆளுநர் பதவிகளை ஏன் ராஜினாமா செய்தேன் என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன், திடீரென தனது பதவிகளை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தமிழிசை தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும், பதவி ராஜினாமா குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டது. இந்த சூழல், […]
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார். அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த […]
திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை இன்று சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கழக தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதான். 1982-ஆம் ஆண்டு […]
சொத்து குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி 30 நாட்களுக்குள் சரணடைய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் வழங்கினார். பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை திரும்ப பெறும் கோரிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் சமீபத்திய செயல்பாடுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கபட்டுவருகிறது. அவரது கருத்துகள் குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே ஆதரவாக உள்ளதாகவும்தாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அண்மையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுருந்தனர். […]
பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜகவை மகிழ்விக்க எண்ணி , அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால், ஆளுநர் பதவி விலக வேண்டும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் ஆளுநரின் செயல்பாடு குறித்து விமசித்து கூட்டாக […]
ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை பஞ்சாபியர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவு மிச்சமாகும் என […]
ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என அண்ணாமலை கேள்வி. சென்னை நீலாங்கரையில் தேசிய கொடியுடன் கடலில் பயணம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உணர்ச்சிபூர்வமாக தன்னுடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாடுவதற்காக தேசிய கொடியை நமது இல்லத்தில் ஏற்றுகின்றோம். ஜம்மு காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசிய கொடி தான் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் ஏற்றவுள்ளோம். இதுபோன்று ஒவ்வொரு விஷயத்தையும் பல இந்தியர்கள் […]
மேற்கு வங்க ஆளுநரான ஜக்தீப் தன்கர், துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்டது.
பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை ஆதாரப்பூர்வமாக தர உள்ளோம் என அண்ணாமலை அறிவிப்பு. பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை வரும் 21-ஆம் தேதி தமிழக ஆளுநரிடம் வழங்க உள்ளோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஸ்போர்ட் ஊழலில் நடைபெற்ற முறைகேடுகள் என்ன என்பதை தெரிவிக்க உள்ளோம். இதுதொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை, இதனால் ஆளுநரை சந்தித்து பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இன்று டெல்லி கிளம்பியுள்ளார். முன்னதாக மயிலாடுதுறைக்கு ஆளுநர் சென்றிருந்த பொழுது கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக ஆளுநர் டெல்லி கிளம்பியுள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மட்டுமல்லாமல், ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் விலக்கு மசோதா ஒப்புதல் கோரி தொடர்ச்சியாக […]
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
சிம்லா:சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பொதுவாக ஆளுநர்கள் அரசுகள் அனுப்பும் கோப்புகள் மீது எந்தவிதமான முடிவுகளையும் எடுப்பதில்லை.அவ்வாறு எடுத்தாலும் மிகவும் காலத்தாமதமாக எடுக்கிறார்கள்.இதனால்,மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அரசுகளுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது என்று நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சட்டமன்றங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில்,சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை […]
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக, சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் நேற்று இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பேக்கரியில் 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். […]
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார். தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் அவர்கள் நியமித்துள்ளார். புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலர் […]
தடுப்பூசி போட்டால் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற நிலையில், கொரோனாவை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல இடங்களில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வரை நாடு முழுவதும் 75 கோடிக்கு மேற்பட்டோருக்கு […]
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி வரும் 18-ம் தேதி( சனிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்தார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், […]
மேற்கு வங்க கவர்னர் தங்கார் 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது நடைபெற்ற வன்முறை குறித்து, மேற்கு வங்க கவர்னர் அவர்கள் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போதும் கவர்னர் ஜக்தீப் தங்கார் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை […]
தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படுகிறாரா? அவ்வாறு நடந்தால் மத்திய அரசு எப்படி கலந்தாலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிட் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தற்போது முதன் முதலாக தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். இன்று மாலை 4 […]