தவெக மதுரை மாநாட்டில்.., தடுப்புகளை தாண்டி ரேம்ப் வாக்கில் ஏறி விஜயை சூழ்ந்த தொண்டர்கள்.!

தவெக மாநாட்டு மேடையில் ராம்ப் வாக் வந்த விஜயை நெருங்க, தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் மேலே ஏறியதால் விஜய் அருகே வந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

TVK

மதுரை :தவெக மாநாட்டு அரங்கில் அக்கட்சியின் சார்பில் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. அதில், மக்களின் மன்னனே.. பெரியாரின் பேரனே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலில் தமிழகத்தின் வரலாற்றை மாற்றும் ‘எங்கள் அண்ணன்’ உங்கள் விஜய், உங்கள் விஜய் வரவா என பெரியார், விஜயகாந்த் உள்ளிட்டோரை ஹைலைட் செய்யும் வரிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த பாடல் ஒலிக்க, மதுரை மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப்பில் நடந்து சென்ற விஜய் தொண்டர்கள் வீசிய கட்சியின் துண்டு, மாலைகளை அன்புடன் கேட்ச் பிடித்து தனது கழுத்தில் அணிந்து கொண்டார். உங்கள் விஜய், பெரியாரின் பேரன், தமிழகத்தின் அடையாளம் என்ற வரிகள் அடங்கிய பாட்டுக்கு இடையே ரேம்ப் வாக் செய்த விஜய், தனது வேட்டைக்காரன் படத்தில் வருவதுபோல் தொண்டர் ஒருவர் வீசிய துண்டை தலையில் கட்டி தொண்டர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் மேடையில் மாஸ் என்ட்ரி கொடுத்து, 500 மீட்டருக்கும் மேற்பட்ட ராம்ப் வாக் மேடையில் நடந்து சென்றார். இந்த ராம்ப் வாக் மேடை 300 மீட்டர் நீளமாக அமைக்கப்பட்டு, ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் செல்ஃபி பாயிண்ட்டாக மாற்றப்பட்டது.

மாநாட்டில் விஜய் கட்சிக் கொடியை 40 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏற்றி வைத்தார், மேலும் அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்களுடன் அவரது கட்-அவுட் மேடையில் இடம்பெற்றது, இது பெரும் கவனத்தை ஈர்த்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், விஜய்யின் வருகையை வரவேற்க ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.