டங்ஸ்டன் விவகாரம் : நான் ‘இதை’ கூறிய பின்புதான் முதலமைச்சர் ‘அப்படி’ பேசினார்! இபிஎஸ் கடும் தாக்கு! 

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் அறிவித்து 9 மாதங்களாக தமிழக அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் போராட்டத்திற்கு பிறகே தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது என இபிஎஸ் கூறியுள்ளார்.

Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy

சென்னை : மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட இருந்த நிலையில் மக்களின் தொடர் போராட்டம், அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகள், தமிழக அரசின் எதிர்ப்பு என இறுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அறிவிக்கப்பட்டிருந்த ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்கனவே, அரிட்டாபட்டி மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இருந்தனர். இந்த சந்திப்பை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று இருந்தனர். அதனை அடுத்து, தற்போது அரிட்டாபட்டி மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

மக்கள் கொதித்தெழுந்த பிறகே…,

அப்போது அந்த நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில்,  ” மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் அறிவித்தபோது, தமிழக அரசு அதனை தடுத்து இருக்க வேண்டும். ஆனால் டெண்டர் இறுதி செய்யும் வரை மாநில அரசு எந்தவித தடங்களும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மக்கள் கொதித்தெழுந்த பிறகு தான், முதலமைச்சர் சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை கொண்டு வருகிறார்.

2023 பிப்ரவரியில்..,

2023 பிப்ரவரி மாதமே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரியது. ஆனால், 2024-ம் ஆண்டுதான் தமிழக அரசு அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கிடையில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது ஏன் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை? உண்மையிலேயே பாதிக்கப்படும் மக்களின் நலன் கருதி இருந்தால், தமிழக அரசு அப்போதே தனித் தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும்.

என் உயிரை கொடுத்தாவது..,

தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, நான் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினேன். ” என் உயிரை கொடுத்தாவது இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவேன். சுரங்கத்தை அமைக்க விடமாட்டேன்.” என நான் சட்டமன்றத்தில் தெளிவாக எடுத்துரைத்தேன். அதன் பிறகு தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” நான் பதவியில் இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது.” எனக் கூறினார்.

‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. திமுக ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் கொண்டுவரப்பட்டது. நான் ஆட்சி பொறுப்பில் (அதிமுக) இருந்த போது தான், காவிரி டெல்டா பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ஆக அறிவித்தேன்.

விவசாயிகள் அனைவருக்கும் நன்றி

இன்றும் நான் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன். விவசாயிகளின் வலி எனக்குத் தெரியும். அரசாங்கம் என்பது மக்கள் பாதிக்கப்படும் விஷயங்களை கண்டறிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டும். ஆனால், அரிட்டாபட்டியில் மக்கள் 10 – 15 நாட்களாக தூக்கம் இல்லாமல் போராடி வந்தார்கள். இந்த உரையை நான் எந்தவித அரசியல் காழ்புணர்ச்சியும் இல்லாமல் தான் பேசி வருகிறேன். ஏன் 9 மாதங்கள் தமிழக அரசு அமைதியாக இருந்தார்கள்? அப்போதே தனித்திர்மானம் கொண்டு வந்திருந்தால், மக்கள் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். என்னை வந்து சந்தித்த விவசாயிகள் அனைவருக்கும் நன்றி.” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்