சென்னை : மத்திய பட்ஜெட் 2025-2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகள் பாராட்டப்பட்டாலும் தமிழகத்திற்கு என சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது. வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாநிலங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில், மாநில பட்ஜெட்டானது 2ஆக பிரிக்கப்பட்டு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் […]
சென்னை : மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட இருந்த நிலையில் மக்களின் தொடர் போராட்டம், அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகள், தமிழக அரசின் எதிர்ப்பு என இறுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அறிவிக்கப்பட்டிருந்த ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்கனவே, அரிட்டாபட்டி மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இருந்தனர். இந்த சந்திப்பை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று இருந்தனர். அதனை அடுத்து, […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றி தாக்கல் செய்யப்பட்ட இச்சட்ட மசோதா அன்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், […]
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , பிடிஆர் பழனிவேல் ராஜன், ஏ.எல்.சுப்ரமணியம், அ.அ.ஜின்னா , ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என் ரவி சென்றார். அதனை கண்டித்து இதற்கு மன்னிப்பு […]