சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்திருந்த சூழலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார். மேலும், தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி என தெரிவித்தார். இதனை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரும், […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ், அண்ணாமலை டெல்லி பயணம் , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகளை அடுத்து நேற்று இரவு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தார். அதனை தொடர்ந்து இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக […]
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது, அந்த சந்திப்பில் அருகில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (அடுத்த மாநிலத் தலைவர்) ஆகியோர் உடன் இருந்தார்கள். அப்போது அதிமுக கூட்டணி குறித்து அவர் பேசியதோடு திமுக குறித்து விமர்சனம் செய்தும் சில […]
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றது. அதனை அடுத்து பல்வேறு அரசியல் மாற்றங்களை அடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி முறிவுக்கு வந்தது. இதனை அடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ், அண்ணாமலை டெல்லி பயணம் , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் […]
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்திற்கும் தீர்வு உண்டு. அதிமுக – பாஜக கூட்டணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்களை கூறினார். அவர் கூறுகையில், இது எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி, இதனை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என தெரிய வேண்டும். இப்போது ஆட்சியில் அதிமுக இல்லை. அதிமுகவில் அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்தால் தான் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய ‘தியாகி யார்’ என்ற பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்தனர். இதுகுறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின், “நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதவிக்காக காலில் விழுந்ததும் ஏமாந்தாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று பதிலடி கொடுத்தார். […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வருகையில், அதிமுக எம்எல்ஏக்கள் “யார் அந்த சார்?’ எனும் வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும், சபாநாயகரிடம் முன் அனுமதி பெறாமல் இது தொடர்பான பதாகைகளையும் பேரவைக்குள் கொண்டு வந்ததாக தெரிகிறது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றது குறித்து […]
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழ தொடங்கிவிட்டது. அதற்கு ஏற்றாற்போல அரசியல் களமும் தற்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வருகின்ற தேர்தல் வழக்கமாக இருக்கும் ஆளும் கட்சி (திமுக) மற்றும் எதிர்க்கட்சி (அதிமுக) என்று மட்டும் இருக்காது. குறிப்பாக கடந்த காலங்கள் போல மெஜாரிட்டி ஆட்சி இருக்காது. 2026-ல் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் என்கிறார்கள் […]
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டே கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இனி தமிழக அரசியலில் ஒன்னு இந்த TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி என […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. யார் யார் எந்தெந்த கட்சி கூட்டணி என்ற பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது நாளுக்கு நாள் பொதுவெளியில் வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது […]
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக பாஜக வரும் தேர்தலில் மீண்டும் கூட்டணியமைக்கும் என்று பேசப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து இன்று காலை டெல்லி விமான […]
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். முதலில் டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த சந்திப்பை அடுத்து அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் , 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக […]
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக திடீர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னால அமைச்சர்கள் சிலர் டெல்லி பயணம் மேற்கொண்டனர். அதிமுக கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. அதனை காணவே எடப்பாடியார் டெல்லி சென்றார் என அதிமுகவினர் கூறி வந்தாலும், யாரும் பாஜக தலைவர்களை சந்திக்க இபிஎஸ் சென்றுள்ளார் என்ற கூற்றை முற்றிலுமாக […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அப்போது, ஒரு மடிக்கணினி 10 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தரமானதாக இருக்குமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் ” ஒரு மடிக்கணினி ரூ.20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்காக தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அப்போது தமிழக அரசு அறிவித்த மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். ஒரு மடிக்கணினி 10 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தரமானதாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார். ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னெடுத்தது. சபாநாயகர் அப்பாவு திமுகவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்குவதில்லை உள்ளிட்ட புகார்களை முன்னிறுத்தினர். இன்று கேள்வி பதில் நேரம் முடிந்து சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு பேரவையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி வாக்கெடுப்பு நடத்தினார். இதில் ஆளும் திமுகவுக்கே அதிக உறுப்பினர் […]
தேனி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேனியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்றார். இந்நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அவரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. யார் துரோகி, ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை செய்தவர், அதிமுக ஆட்சியை அகற்றக்கோரி வாக்களித்தவர், அதிமுக தலைமை செயலகத்தை சூறையாடியவர் என கடுமையாக சாடினார். இபிஎஸ் பேசுகையில், ” ‘எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல். அதில் யாரும் ஏறமாட்டார்கள். நன்றி மறந்த துரோகிகளை விரட்டினால் தான் […]
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் என இரண்டாக பிரிந்த அதிமுகவில், தற்போது ஓபிஎஸ் முழுதாக ஓரங்கபட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிச்சாமி தான் தொடர்ந்து வருகிறார். இருந்தும் இபிஎஸ் – ஓபிஎஸ் பிரச்சனை அவ்வப்போது எழுந்து வந்துகொண்டுதான் இருக்கிறது . இபிஎஸ் – செங்கோட்டையன் : இதற்கிடையில் தற்போது புது உட்கட்சி பிரச்சனையாக […]
கோவை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பற்றியும் , எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைவது பற்றிய கருத்துக்களுக்கும் பதில் அளித்து பேசியிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான முந்தைய சந்திப்பு பற்றியும் அவர்கள் கூறியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ” அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) நானும், எடப்பாடி பழனிசாமியும் அங்கம் வகித்தோம். அப்போது கூட்டணி […]
கோவை : கோவை உக்கடம் பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். அவரை காணவில்லை என அவரது பாட்டி போலீசில் புகார் அளித்த அடுத்த நாள் அந்த சிறுமி வீடு திரும்பியுள்ளார். சிறுமியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தெரிந்த நண்பர்கள் அழைத்ததன் பெயரில் குனியமுத்தூர் பகுதிக்கு சென்றதாக கூறினார். அங்கு ஒரு பகுதியில் அறை எடுத்து […]