மதுரை :மதுரை மாவட்டம் பாரபத்தியில் தவெகவின் 2-வது மாநில மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
மக்கள் வெள்ளத்திற்கு நடுவே இன்னும் சற்று நேரத்தில் ராம்ப் வாக் செய்ய உள்ள விஜய், மாநாட்டு உரையை நிகழ்த்த உள்ளார். மாநாட்டு விழா மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், விஜய் மாநாட்டு மேடைக்கு ரேம்ப் வாக் மூலம் தொண்டர்களை சந்திக்க வந்தார், இதற்கு முன்பு அவர் கேரவனில் இருந்து கலை நிகழ்ச்சிகளை ரசித்தார்.
மாநாட்டில் தவெகவின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் விஜய்யின் பெற்றோரும் மேடையில் இருந்தனர். மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் குவிந்தனர், மேலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பந்தல் இல்லாத நிலையில் கூடியிருந்தனர்.
குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நேரலையில் மாநாட்டைக் காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநாட்டு மேடையில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற கருப்பொருளுடன் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் விஜய்யின் படங்கள் இடம்பெற்றன.
