கோடநாடு வழக்கு – எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Postponement of hearing of EPS and Sasikala in Kodanad case.

கோடநாடு வழக்கில் ஈபிஎஸ், சசிகலா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வாழ்க்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து.

விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று 4 வாரத்துக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தீபு, சதீசன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க வேண்டும் என்றும் மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.