ADMK: அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கின் தீர்ப்பு தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. Read More – தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்..! தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது இந்த நிலையில் மக்களவை தேர்தலின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் […]
Edappadi Palaniswami: தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளைய தினம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக […]
ADMK: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதில் வலுவான தனி கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் அதிமுக உறுதியாக உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். Read More – மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவர்! திருமாவளவன், செல்வப்பெருந்தகை கூட்டாக பேட்டி ஏற்கெனவே தேர்தல் அறிக்கை […]
காவிரி நீர் விவகாரம் தொடர்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தனது தலைமையில் வரும் 29ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,“காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி […]
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி […]
எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் போது “அதிமுகவின் மறைந்த முன்னாள் […]
சசிகலாவுடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அங்கு சசிகலாவும் வந்திருந்த நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்து சசிகலா கூறும்போது, “குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் இந்த சந்திப்பு நடந்தது” என கூறினார். பின்னர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பும் […]
இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமைக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ”அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடி ஏற்றுவோம். இந்தியா கூட்டணி ஆண்டிகள் மடம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தான் வெற்றி பெறுவார் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியை நாசப்படுத்திவிட்டார். அம்மா மக்கள் […]
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 72வது மாநில மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றினார். முன்னதாக மதுரை நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்தார். மாநாட்டில் அவர் பேசுகையில், “இன்றைய தினம் தமிழ்நாடே மதுரையை உற்று நோக்கியிருக்கிறது. நாடார் என்பவர்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். சிறுகடையில் ஆரம்பித்து பெரிய நிறுவனம் தொடங்குவார்கள்.. […]
தமிழ்நாட்டில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயன்று வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தின் மல்லமூப்பம்பட்டியில் திமுக, பாமக, கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்துப் பொருட்களின் விலையும் 40% வரை உயர்ந்துள்ளன. கொரோனா காலக்கட்டத்தில் கூட விலைவாசியை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. கருணாநிதி அவருக்கு […]
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்தார். அங்கு அவர் பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு […]
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவை தர்காவில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவையில் ஒரு தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனையில் […]
தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணைக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘ தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை […]
2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு. வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் பொதுமக்கள் என ஆளும் திமுக அரசை விமர்சித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேட்டியில், அம்மா ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றி விட்டதாக கூறினார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சில திட்டங்களில் ஒரு சிலவற்றை தொடர்ந்து செய்துவிட்டு தாங்கள் செய்ததாக குறிப்பிடுகிறார்கள் என தான் வெளியிட்டுள்ள […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம். மறைந்த திமுக மூத்த தலைவரும், அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி, இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா வளாகத்திற்கு மறைந்த […]
கோடநாடு வழக்கில் ஈபிஎஸ், சசிகலா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வாழ்க்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து. விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று 4 வாரத்துக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, […]
இந்த 4 மாத காலத்தில் திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதிமுக சார்பில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். […]
தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது திமுக என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. ஊரக உள்ளாட்சித் தேர்தளையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சென்ற இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் இன்று காலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை, தேர்தல் நேரத்தில் அளித்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள், […]
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு போயுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில், அதிமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏதாவது ஒரு கரணம் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு. அதிமுக கட்சி விதிகளின் படி, புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதன்பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள். இது அதிமுகவின் விதிகளுக்கு முரணானது என்றும் மறைந்த […]