அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவு..!

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு  ஜனவரி 19ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக சார்பில் வழங்க உள்ளதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக ஆர்.கே.நகர் நிர்வாகி  நித்தியானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் ஒவ்வொரு ஆண்டும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் … Read more

கொடநாடு வழக்கு – ஈபிஎஸ் சாட்சியப்பதிவு தாக்கல்..!

EPS

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும் ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருவதற்கு பதிலாக … Read more

துணை வேந்தரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு..!

பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை  கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி … Read more

வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!

pongal parisu

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் நாளை வரை விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது. ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- கொலை வழக்கு பதிய மனு!

கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதன்பின் இந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை … Read more

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்.. 5 பேரை பரிந்துரைத்த கொலீஜியம்..!

supreme court of india

அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது தொடர்பான பரிந்துரைகளை நேற்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து.. ஐகோர்ட் உத்தரவு!

selvaganapathy

அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. அதாவது, கடந்த 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த  … Read more

#Breaking : மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைப்பு.! மனு தள்ளுபடி.!

ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதை தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து, அதற்கான கால கேடு இந்த டிசம்பர் 31 வரையில் என குறிப்பிட பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கையில், வாடகை வீட்டில் குடியிருப்போர், … Read more

பொது இடங்களில் மது அருந்த தடை.? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டாஸ்மாக் மூடிய பிறகு பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.   டாஸ்மாக் மதுபான கடை மூடிய பிறகும் பலர் பொது இடங்களில் மது அருந்தி வருகின்றனர். இதனால், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில்,டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் பொதுவெளியில் மது அருந்துவோரை … Read more

ஆதார் எண் – மின் இணைப்பு எண் இணைப்பு வழக்கு.! உயர்நீதிமன்ற தீர்ப்பு தேதி இதோ.!

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்ற வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.  மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது.  இதற்காக இந்த மாத இறுதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி … Read more