ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம். நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உச்சகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டியிருக்கிறது. வரி பாக்கி நிலுவையில் இருப்பதாகவும், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதாலும் 2 எஸ்டேட்களின் வங்கிக் கணக்கை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. […]
கோடநாடு வழக்கில் ஈபிஎஸ், சசிகலா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வாழ்க்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து. விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று 4 வாரத்துக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்து. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்து. அரசு தரப்பில் புலன் விசாரணைக்கு கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் நடத்திய புலன் விசாரணை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் […]
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரில் நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான் மற்றும் சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை அதிகாரிகளின் விசாரணை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 மற்றும் 9வது நபர்களாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இருவரிடமும் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட மனோஜ்சாமி, சந்தோஷ் சாமியிடம் காவல்துறையினர் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு மனோஜ்சாமி, சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகியுள்ளனர். தனிப்படை சம்மன் அனுப்பியதை அடுத்து, இருவரும் உதகையில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 8 மற்றும் 9வது நபர்களாக குற்றச்சாட்டப்பட்ட இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். ஜாமீனில் உள்ள நிலையில், தற்போது விசாரணைக்கு ஆஜராகி, போலீசார் விசாரித்து […]
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் விபத்தில் இறந்த கனகராஜ் பணிபுரிந்த உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோடநாடு வழக்கில் 10 நபர்கள் […]
கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் தவறில்லை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கோடநாடு எஸ்டேட்டில் அசம்பாவிதம் நடந்திருப்பது உண்மை. இதனை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அதனால், விசாரணை நடத்துவது குறித்து எதற்கு பயப்பட வேண்டும். நியாமான முறையில் எல்லாரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு […]
கோடநாடு வழக்கு தொடர்பாக கூடலூர் காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை. உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். […]
காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கோவையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உறவினர்களிடம் கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை பந்தய சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வழக்கறிஞருடன் எஸ்டேட் மேலாளர் நடராஜன் கூடுதல் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் மற்றும் ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்துவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் உதகை நீதிமன்றத்தில் விசாரணை. கடந்த 2017-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் இருந்த நிலையில், சமீபத்தில் மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சாயனுக்கு […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கொடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை வைத்த மேத்யூ […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் பிப்ரவரி 2-ல் ஆஜாராக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த பங்களாவான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் பிப்ரவரி 2 தேதி ஆஜாராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 2 ஆம் தேதி சயன் மற்றும் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மாவட்ட நிதிமன்றத்தில் ஆஜாராக ஆணையிடப்பட்டுள்ளது […]