மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடர் விடுமுறை!

tn schools

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை … Read more

இன்றுடன் ஓராண்டு நிறைவு… திமுக அரசுக்கு கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ்!

RAMADOSS

PMK: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்? என திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க இதுவரை வழங்கப்பட்ட … Read more

இதற்கெல்லாம் கேரண்டி தருவீர்களா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

mk stalin

MK Stalin: கேரண்டி கார்டுடன் வந்திருக்கும் பிரதமர் மோடி, சில கேரண்டிகளை தருவாரா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி. தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த சூழலில் தேர்தலை முன்னிட்டு, பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து … Read more

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்!

teachers

TN Govt: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு. கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8ம் தேதி வரை சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக, திண்டுக்கல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்தி 19 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு  … Read more

கடலூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

mk stalin

MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் நாடாளுமன்றம் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், அனைத்து பிரதான அரசிய கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு, தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின், தங்களது மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த … Read more

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் பொது விடுமுறை!

tn govt

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை. நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்பின், ஏப்ரல் 26, மே 7, 13,  20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக வாக்குப் பதிவு … Read more

அனல் பறக்கும் தேர்தல் களம்! முதல்வர் இன்று விழுப்புரத்தில் பரப்புரை!

mk stalin

MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மற்றும் கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த சூழலில், திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்களும் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், வரும் தேர்தலில் திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகள் … Read more

மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

mk stalin

MK Stalin: ஏழைகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் சிறப்புகளை எடுத்துரைத்து, மத்திய பாஜக அரசை விமர்சித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது ஏழைகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என … Read more

அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி பொருத்த உத்தரவு!

school vehicles

TNSchools: தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும். பள்ளி வாகன … Read more

மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் – முதல்வர் ஸ்டாலின்

mk stalin

MK Stalin: மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு.  பாஜகவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் … Read more