"அதிமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடு எடுப்பது சாதாரணம்தான்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திமுக இருப்பது உங்களுக்காகத்தான், சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

MKStalin - DMk

சென்னை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அ.ரகுமான் கான் எழுதிய ஐந்து நூல்களை வெளியிட்டார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், ரகுமான் கானின் எழுத்து மற்றும் பேச்சுத் திறமையை பாராட்டி, அவரை ஒரு “ஸ்டார் பேச்சாளர்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ரகுமான் கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். ஒரு திறமைசாலியை கண்டு கொண்டால் அவர்களை அரவணைக்கும் பழக்கம் கலைஞரிடம் இருந்தது. கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரகுமான் கான்.

அவரது நூல்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்றும், அவர் தனது எழுத்துக்களின் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதாகவும் கூறினார்.மேலும், அதிமுகவுக்கு எப்போதும் இரட்டை நிலைப்பாடு சாதாரணம் தான். நாட்டை சர்வாதிகாரமாக மாற்ற ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

நாட்டை ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக இந்த சட்டம். திமுகவில் எத்தனை கோடி பேரை சேர்த்தாலும் கொள்கை பிடிப்போடு வளர்க்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும்” என்றார்.