டெல்லி : நாடே எதிர்நோக்கிய முக்கிய மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மத்திய அரசு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கோரும் இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா மூலம், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறும் சூழல் […]
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக இந்து கோவில் ஒன்று இருந்ததாகவும், அந்த கோவிலை இடித்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது எனக் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து பார்த்த நீதிமன்றம் மசூதி ஆய்வு செய்யவேண்டும்…அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கான […]
டெல்லி : லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதன்படி, ஜான்ஸ்கார் (Zanskar), ட்ராஸ் (Drass) , ஷாம் (Sham), நுப்ரா (Nubra), சாங்தாங் (Changthang) ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று […]
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22இல் தொடங்கப்பட்டது. ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் , குறிப்பிட்ட தேதிக்கு முன்னராகவே நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு […]
டெல்லி: தமிழகத்தில் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம், அதே போல சென்னையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக மாநில ஆளுனரிடத்தில் பாஜக , அதிமுக கட்சியினர் கோரிக்கை வைத்து இருந்தனர். மேலும் தமிழக சட்ட ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநர் ரவியிடம் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி […]
டெல்லி: ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அவசரநிலை எனும் எமெர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு 352வது பிரிவானது செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டு இருந்தன. ஜூன் 25, 1975 அன்று இந்திராகாந்தி ஆலோசனையின் […]
உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புலராய் எனும் கிராமத்தில் நேற்று போலே பாபா எனும் ஆன்மீக சொற்பொழிவாளர் தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். […]
டெல்லி: மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய பகுதிகளில் சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடர், விறுவிறுப்புக்கும் , பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் உறுப்பினர்களிடையே விவாதங்கள் அனல் பறந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியது இன்னும் சில நாட்கள் பேசுபொருளாகவே இருக்கும்படி அமைந்தது. அதற்கு பாஜகவினர் தற்போது வரையில் தங்கள் எதிர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நேற்று ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் இந்து […]
டெல்லி: ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜக, பிரதமர் மோடி இல்லை என ராகுல் காந்தி பேசியதற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். 18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் நடைபெற்று வரும் வேளையில், இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதலை எதிர்த்தவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. எங்களில் (எதிர்க்கட்சிகளின்) பலர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். இன்னும் எங்கள் தலைவர்கள் சிலர் சிறையில் […]
டெல்லி: தேசிய மீட்புப்படை வீரர்களின் 2வது மலையேற்ற விஜய நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கூறுகையில், தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) பணியார்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியை கூறுகிறேன். அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து இருந்த உதவித்தொகையை உயர்த்த ஒப்புதல் கிடைத்துள்ளது. மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையானது 40 சதவீதம் வரை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது […]
தமிழிசை சௌந்தரராஜன் : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜனை திடீரென நேரில் சந்தித்துள்ளார். முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் நீடிப்பதாக கடந்த சில நாட்களாகவே, செய்திகள் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது […]
டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனை அடுத்து, இன்று NDA கூட்டணியில் உள்ள எம்.பிக்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம், இன்று டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற […]
டெல்லி: ஜூன் 1ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல் பல்வேறு செய்தி நிறுவனங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டனர். அதில் பெரும்பாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பதை உறுதிப்படுத்திவிட்டன. தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பின் பின்னர் திங்கள் கிழமை (ஜூன் 3) பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பங்குகள் உயர்ந்தன. இதுகுறித்தும் தேர்தலுக்கு பிந்தைய […]
மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெருவாரியான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர்களின் கள நிலவரத்தை பற்றி பாப்போம். அமித் ஷா : குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் பாஜக சார்பாக போட்டியிட்ட இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா 8,58,197 வாக்குகள் பெற்று 6,50,399 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சோனல் ராமன்பாய் படேலை விட […]
டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அதில், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது குறித்து விளக்கம் அளித்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராகவும் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தனது சமூக வலைத்தளம் வாயிலாக விமர்சனம் […]
பஞ்சாப்: வரும் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது. இந்த 7ஆம் கட்ட தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஞாயிறு) பஞ்சாப், லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பஞ்சாபில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய செய்ய […]
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக நடைபெற்று 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 20, 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், பிரச்சார வேளைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமுள்ள […]
சென்னை: பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பீகார் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், சீதையின் தேசமான இங்கு பசுவதை செய்வதை ஏற்க முடியாது என்றும், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். சீதாதேவி பிறந்த ஊரில் பசுவை கடத்துவது பசுவதை […]
சென்னை : பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு அமித்ஷா என்றும் அடுத்து யோகி ஆதித்யநாத் என்றும் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்று தற்போது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இருந்தார். […]
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், அதற்கடுத்து மே 13ஆம் தேதியும், 7ஆம் கட்ட (இறுதி) தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தல் சமயம் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் மாற்று கட்சி தலைவர்களை விமர்சிக்கவும் […]