சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சென்னை சென்று கொண்டிருந்த முதல்வர் அவர்களின் பாதுகாப்பு வாகனம் கடந்த 18 ஆம் தேதி அவ்வழியே சென்று கொண்டிருந்த சௌந்தரம் என்னும் 64 வயது பெண் மீது மோதியுள்ளது. இதனால் அந்தப் பெண் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக துவங்கப்படவுள்ள நிறுவனத்திற்கு காணொளி காட்சி மூலம் பந்தக்கால் நட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொரோனாவால் உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்க கூடிய சூழ்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக வெளியில் நடமாட கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. அவ்வாறு போடப்பட்ட ஒப்பந்தங்களில் தற்பொழுது 8 புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் […]
நடிகர் ரஜினி கட்சி ஆரமித்தால் 10 நாட்களில் அவர்தான் முதல்வர் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்பொழுது வரை அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. சமீபத்தில் ரஜினி கூறுகையில், மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார். […]
காவிரி டெல்டாவில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்ய உடனடியாக உத்தரவிட்ட தமிழக முதல்வருக்குத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறியிருப்பதாவது, ”காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது மே முதல் வாரம் தொடங்கி அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னமும் நேரடி நிலையங்கள் திறக்கப்படாததால் அந்த அறுவடைப் பணிகள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் நேரிலும், […]
மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அம்மாநில முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, 6 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் அல்லது மேலவை உறுப்பினராக தேர்வானால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது வந்தது. இந்நிலையில், வரும் மே 21 -ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் […]
உலகம் முழுவதும் தற்போது லட்சக்கணக்கானோர் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையிலும் தன்னலம் பாராது மருத்துவர்கள் காவலர்கள் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து 400 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இது குறித்து அண்மையில் பேசிய மருத்துவர்கள் […]
கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . கொரோனா முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் […]
கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பிடித்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. யோகி ஆதித்யநாத் 2017, மார்ச் 19ல் உத்தரபிரதேசத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் யோகி பொறுப்பேற்ற ஓராண்டில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. பின்னர் தோல்வியிலிருந்து பாடம் கற்று கொண்டதாக யோகி தெரிவித்தார். இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், 62 தொகுதிகளை பாஜக […]
தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது. சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது. சீமானின் இந்த கருத்தும், செய்தியும் தமிழக […]
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகம் 10 துறைகளில் முதலிடத்தில் உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தொழில் துறையை ஊக்குவிக்க பச்சை […]
மதுரையில் பசுமலை அமிர்தானந்தமயி மடத்தில் 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்மீக விழிப்புணர்வு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவி மீது காதல் கொண்டுள்ளார். முதல்வர் பதவி அவர் மீது காதல் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். மதுரை பசுமலை அமிர்தானந்தமயி மடத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாதா அமிர்தானந்தமயி பங்கேற்று, 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மடத்திற்கு […]
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு புதிதாக 3 மாவட்டங்களை நியமித்து 40 மாவட்டங்ககளாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, பின்னர் பெரிய மாவட்டமாக இருந்த வேலூரை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய […]
தளபதி-64 படத்துக்கு மாஸ்டர் என்று டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட்டது. விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் CM of Tamilnadu என குறிப்பிட்டுள்ள அவர்கள், CM என்றால் Collection Master என்று விளக்கமும் கொடுத்துள்ளனர். தளபதி விஜய் தற்போது பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். […]
ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பா ஸ்ரீவாணி, ஜெகன் மோகன் ரெட்டியை புகழும் படியாக டிக் டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். “ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா” என்ற தெலுங்கு பாடல் அவரது கட்சி சார்பில் முன்பு வெளியாகி கவனம் பெற்றது. டிக் டாக்கில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாவது சாதாரணமாக நடக்கும். அதில் பிரபலங்களும், டிக் டாக்கில் கவனம் செலுத்தி வருவது உண்டு. அதை போன்று ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான […]
டெல்லி ஜாமியா மாணவர்கள் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறினார். உத்தவ் தாக்கரேக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது மை ஊற்றினார். மஹாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி அமைத்துவருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா மாணவர்கள் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதலமைச்சர் […]
1972ம் ஆண்டு திமுக கட்சியில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி தான் தற்போது ஆளுங்கட்சியாக திகழும் அதிமுக. இக்கட்சியை 1972ம் ஆண்டு அக்.17ம் தேதி எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர். இதன்பின் 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக கட்சி சட்டமன்ற தேர்தலில் 144 இடங்களில் வெற்றியை பெற்றனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடர்ந்து 13 வருடங்கள் ஆட்சி […]
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்துகொள்ள மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 15ம் தேதி டெல்லியில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமை தங்குவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,இந்த நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கும் , துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்க்கு புறப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு படமாகபோகிறது எனவும், அதனை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயகுக்க போகிறார் எனவும், அதற்க்கு கதாநாயகி தேர்வு நடைபெறுவதாகவும் சில செய்திகள் கிளம்பின. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் இப்படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. இதற்கிடையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பெயரும் இயக்குனர் லிஸ்டில் இடம்பெற்றது. அதில் நடிக்க திரிஷா, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா என முன்னணி நடிகைகள் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை […]
தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆழவேண்டும் என கூறி நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் என பிரபல நடிகர் ஒருவர் பேசியுள்ளார். லொள்ளுசபா புகழ் நடிகர் ஜீவா தான் இப்படி பேசியுள்ளார். “150 தொகுதிகளில் தலைவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது, அவர்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு பிரபல நாளிதழே செய்தி வெளியிட்டுள்ளது. வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் […]