“நான் அவ்ளோ பெரிய ஆள் இல்ல., கொஞ்சம் நிறுத்திருயா.,” கடுப்பான புஸ்ஸி அனந்த்.!
பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், 'யோவ் காரை நிறுத்துயா' என சட்டென டென்ஷன் ஆனார் ஆனந்த்
விழுப்புரம் : தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 தேதி நடைபெற இருக்கும் சூழ்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.
இன்றைய தினம், மாநாடு வேலை நடந்து வரும் இடத்தில் இருந்த, அரசமரத்தடி பிள்ளையாரை வழிபட்டு, சூரத்தேங்காய் உடைத்து அதன்பின் விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டு பணிகளை பார்வையிட்டார் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த்.
பின்னர், கையில் குடையுடன் ஆனந்த், மாநாடுக்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இது ஒரு பக்கம் இருக்க, அவர் காரில் ஏறிச் செல்லும் பொழுது, தவெக மாநாடு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புஸ்ஸி ஆனந்த் விருப்பம் இல்லாததை போல பதிலளித்தார்.
அப்போது அவரது டிரைவர் காரை விறுட்டென முன்னோக்கி நகர்த்தினார், அப்போது சட்டென டென்சனான புஸ்ஸி ஆனந்த், “நான் பேசிட்டு இருக்கேன்.. நீ வண்டிய எடுக்குற..” என கடிந்து கொண்டார். மேலும், விஜய்க்கு அடுத்த இடத்தில் நாங்கள் இருப்பதாகவும், இப்படி காரில் உட்கார்ந்து பேசும் அளவுக்கு தான் பெரிய ஆள் இல்லை எனவும்’ அவர் கூறினார்.