சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 முதல் 3000 வரையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், மாவட்ட பொறுப்பாளர்கள், மற்ற நிர்வாகிகள் என […]
சென்னை : ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார். இது வெறும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே இன்றைக்கு ஒரு விஜய் நோன்பு இருந்திருக்கிறார். காலை முதல் உணவருந்தாமல் இருந்த அவர், நோன்புக் கஞ்சி, பேரீச்சம்பழம், சமோசா […]
சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார். இது வெறும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே இன்றைக்கு ஒரு விஜய் நோன்பு இருந்திருக்கிறார். விஜய்யுடன் நோன்பு திறக்க, நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களும் குவிந்தனர். ஆம், காலை […]
சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ராயப்பேட்டையை சுற்றியுள்ள 15 பகுதிகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சமோசா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவை பேக்கிங் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி […]
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, தவெக என பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சியினர் இதில் பங்கேற்கவில்லை. இந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் குறித்தும், தவெக தலைவர் விஜய் தொகுதி மறுசீரமைப்பு பற்றி’ தென் மாநிலங்களின் பிரிதிநிதித்துவம் குறையும்’ […]
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவுக்கு தேசிய அளவில் அறியப்பட்ட பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வருகை புரிந்துள்ளார். ஒரே மேடையில் தவெக தலைவர் […]
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் பொறுப்புகள் வழங்ப்படுகிறது என திருவண்ணாமலையை சேர்ந்த ஆரணி ஹரிஷ் எனும் தவெக பிரமுகர் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். தான் அதிக வேலை செய்து வந்ததாகவும், ஆனால் தனக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை எனவும், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு வாக்கு சேகரித்தவருக்கெல்லாம் பதவி கொடுக்கிறார்கள் எனவும், தன்னை ரவுடி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவன் எனக் கூறி […]
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர் விஜய். அரசியல் என்றாலே பல்வேறு ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள் என கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சாமளிக்க வேண்டிய சூழலையும் அவர் எதிர்கொள்ள வேண்டி வரும். அதனை திறம்பட ஏதிர்கொண்டு செயல்பட்டால் அரசியல் களத்தில் சிறப்பாக செயல்படலாம் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம். தற்போது ஓராண்டு நிறைவிற்குள் 5 கட்டமாக 120 மாவட்ட செயலாளர்களில் 95 பேர்களை […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, தவெக தனது கட்சியை வலுப்படுத்தவும் , கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளை 120 கட்சி மாவட்டங்களாகப் பிரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்டச் செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாகிகள் குழு அமைக்கப்படுவதாக […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடந்த 19 கழக மாவட்டங்களுக்கு, மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, 2ஆம் கட்டமாக த.வெ.க.வின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் ஆலோசனை நடத்தினார். பின்னர், தனித்தனியே கட்சி நிர்வாகிகளை சந்தித்தபின், மாவட்ட செயலாளர் நியமணம் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு அரசியல் பணிகள் தீவிரமாக நடத்தி வருகிறார். கடந்தாண்டு பிப்ரவரியில் கட்சி தொடங்கப்பட்ட நிலையில், அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்குள் கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பை வழங்க கட்சி தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு முறைப்படி நடைபெற்று தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் விஜயிடம் கொடுக்கப்பட்டது. அதில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்குள் கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பை வழங்க கட்சி தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக கடந்த ஜனவரி 10ஆம் தேதி சென்னை பனையூரில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு சில மாவட்டங்களில் கட்சி தலைமை நியமித்த நிர்வாகிகள் உடன் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இன்னும் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் உள்ளது. தவெக கட்சி முதலாம் ஆண்டு விழா நடைபெறும் போது கட்சி நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்கட்சி […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை, சென்னை பூக்கடையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு வழங்கிய பெண் நிர்வாகிகளை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளை சந்திக்க சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்து, தவெகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். பின்னர், கைது […]
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அந்த கடிதத்தை துண்டு பிரசுராமாக அக்கட்சியினர் வழங்கி வந்ததை பார்வையிட புஸ்ஸி ஆனந்த் வந்ததார். […]
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக வந்த புகாரின் பேரில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் இன்று எழுதியிருந்தார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் […]
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாகக் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் இன்னும் பேசுபொருளாகவுள்ளது. ஏற்கனவே, பல அரசியல் கட்சித் தலைவர்களும் மாநாடு நடந்த அடுத்த நாளில் பேசிக்கொண்டு இருந்த நிலையில், இப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் காரணத்தால் விஜய் பேசிய விஷயங்கள் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்த சூழலில், நாளை தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தது ஏன்? “இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் […]
விழுப்புரம் : தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார். மேடையில் பேச தொடங்கிய விஜய், “பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் […]
விழுப்புரம் : த.வெ.க மாநாடு பிரமாண்டமாக இன்று நடைபெறவிருக்கும் நிலையில் , இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு தவெக தலைவர் விஜய் வரவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அலைகடலென திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு இடையே ராம்ப் வாக்கில் நடந்து வரவுள்ள விஜய், ரிமோட் மூலம் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு நிகழ்வுகளை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொள்கை வெளியீடு, கட்சிக்கான பாடல் வெளியீடு என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதை […]