இணையத்தில் ட்ரெண்டாகும் 'என் உயிரினும் மேலான' ஹேஸ்டேக்..!  

இன்று திமுகவினர் நடத்திய பேச்சுப்போட்டியின் இறுதி நிகழ்வை முன்னிட்டு இணையத்தில் "என் உயிரினும் மேலான" எனும் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Tamilnadu CM MK Stalin - Kalaignar Karunanidhi

சென்னை :கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. 10 தலைப்புக்கள் கீழ் மாநிலம் முழுவதும் இருந்து 17ஆயிரம் பேர் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று இருந்தார். இந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் இணையத்தில் திமுகவினர் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

‘என் உயிரினும் மேலான’ எனும் பெயரில் இந்த பேச்சுப்போட்டிக்கள் நடைபெற்றன. இதனை குறிப்பிடும் வகையில் ”என் உயிரினும் மேலான’ எனும் ஹேஸ்டேக் இணையத்தில் (எக்ஸ் சமூக வலைதளத்தில்) ட்ரெண்டாகி வருகிறது.

அதே போல, தமிழக வெற்றிக் கழக மாநாடு பற்றிய ஹேஸ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும்,  அதற்கு எதிராகவும் சிலர் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.