டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது. மேலும், மொழியை தேர்வு செய்யும் பட்டனில் கூட இந்தி மொழி இருந்ததால், இந்தி தெரியாத பயணர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் இந்தி திணிக்கப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். […]
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893 பயனாளிகளுக்கு, ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற வளர்ச்சி பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு […]
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று 2 நாள் சுற்று பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். இன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் துணைமுதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பிறகு, குறிச்சி நகர் மெயின்ரோட்டில் உள்ள மைதானத்தில் தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட […]
தஞ்சை : 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தலைமை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, 5 பேர் கொண்ட தேர்தல் கண்காணிப்பு குழு, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தஞ்சையில் திமுக தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2026 தேர்தல் பற்றியும், திமுக கூட்டணி பற்றியும் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “திமுகவை அழிக்க வேண்டும் என சில நினைக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பதில் சொல்ல […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவசிலையினை தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திறந்து வைத்தார். சிலையை […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார். ஊழல் , குடும்ப ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகின்றனர் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்தது. காய்த்த மரம் தான் கல்லடி படும் . திமுக இது போல பல்வேறு எதிர்ப்புகளை கண்டுவிட்டது. திமுக ஆலமரம் […]
சென்னை : நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தயம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐரோப்பா GT3 கோப்பை கார் பந்தய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான பயிற்சிகளில் தற்போது படிப்பிடிப்பு இடைவேளைகளுக்கு நடுவே கலந்து கொண்டு வருகிறார். மேலும், அஜித்குமார் ரேஸிங் எனும் கார் பந்தய உபகாரணங்களுக்கான நிறுவனத்தையும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். நேற்று அஜித்குமார் கார் ரேஸிங்கிற்காக பயிற்சி மேற்கொண்ட […]
சென்னை : நடந்து முடிந்த த.வெ.க மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் எனவும், திராவிட மாடல் அரசு என மக்களை ஏமாற்றுகின்றனர் என நேரடி விமர்சனங்களை முன் வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. விஜயின் பேச்சுக்கு திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்று முடிந்தது. சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தனது கட்சியின் கொள்கைகள், செயல்திட்டடங்கள் , அரசியல் கருத்துக்கள் என முதல் அரசியல் மாநாட்டை நினைத்தபடி செயல்படுத்தியுள்ளார் விஜய். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் என்றும், திராவிட மாடல் அரசு என மக்களை […]
விழுப்புரம் : தவெக மாநாடு தொடங்கிய நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டு மேடையில் தோன்றிய விஜய், அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை நோக்கி வணக்கம் செய்தார். இருபுறமும் அலைகடலென திரண்டிருந்த தொண்டர்கள் நடுவே அமைக்கப்பட்டு இருந்த ராம்ப்பில் நடந்து சென்ற தலைவர் விஜய்யை நோக்கி, தொண்டர்கள் கட்சித் துண்டுகளை வீச, சிலவற்றை அப்படியே கேட்ச் பிடித்த விஜய், தன் தோளில் அணிந்து கொண்டார். தற்பொழுது, மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து பின், 101 […]
சென்னை : கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. 10 தலைப்புக்கள் கீழ் மாநிலம் முழுவதும் இருந்து 17ஆயிரம் பேர் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று இருந்தார். இந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் இணையத்தில் திமுகவினர் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். […]
விழுப்புரம்: தவெக மாநாடு விக்ரவாண்டியின் வி.சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மாநாட்டின் திடலுக்குள் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர்களின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இடையே இன்று காலை முதல் திடலுக்கு வந்து விஜயை பார்க்க வேண்டும், அவருக்கான தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என காத்துக்கிடக்கின்றனர். தமிழக மக்கள் மட்டும் இன்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விஜய்க்கு ஆதரவு […]
சென்னை : தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இன்று அதிகாலை முதலே அதிகளவிலான தொண்டர்கள் மாநாட்டு திடலில் கூடியுள்ளனர். இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக கட்சி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சென்னை கலைஞர் அரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை திமுக இளைஞரணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்து நடத்தினார். இந்த […]
சென்னை : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கட்சி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சென்னை கலைஞர் அரங்கில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வை திமுக இளைஞரணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் பேசிய துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின், ” கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திமுகவில் அனைத்து […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தானது பாடப்பட்டது. அதில், ‘சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்’ எனப் பாடுவதற்குப் பதிலாக ‘கண்டமதில்’எனப் பாடினார்கள். இதனால், மீண்டும் உதயநிதி பாடச்சொன்ன போது, அதிலும் தவறாகவே படித்திருப்பார்கள். அதன் பின் அதற்கு விளக்கம் கொடுத்து உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது, அவரது விளக்கத்திற்கு சாடியும், அவரிடம் சில […]
சென்னை : சமீபத்தில் ஆளுநர் ரவி கலந்து கொண்டிருந்த இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் , தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு பாடப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு, பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதற்கும் தனக்கு சம்பந்தம் இல்லை என ஆளுநர் விளக்கமும் அளித்திருந்தது இருந்தார். எனவே, இந்த விவகாரம் முடிந்தது. தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து இன்று தமிழகத்தின் துணை […]
சென்னை : ஆண்டுதோறும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின், இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த இந்த போட்டிகளானது இன்று நிறைவு பெற்றுள்ளத்தைத் தொடர்ந்து, இதனது நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதன்பின், விழாவின் நிறைவில் […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின் இந்தாண்டு விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவு பெற்றுள்ளன. மாவட்ட , மண்டல அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற வீரர் , வீராங்கனைகள் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய இறுதி போட்டிகளில் பங்கேற்றனர். கடந்த 20 […]
சென்னை : நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ஒரு தம்பதி ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தகாத வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். நேற்று, மெரினா கடற்கரை லூப் சாலையில் ஒருவர் தனது காரை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அங்கு ரோந்து பணிக்கு வந்த போலீசார் காரை நிறுத்தி காரினுள் இருந்த தம்பதியிடம் நீங்கள் யார் எனக் கேட்டு காரை எடுக்க சொல்லி கூறியுள்ளனர் என தெரிகிறது. உடனே அந்த தம்பதி […]
சென்னை : ஆளுநர் ரவி நேற்று கலந்து கொண்ட இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகளை விட்டுவிட்டுப் பாடியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் ஆளுநர் பற்றி விமர்சித்து தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, ஆளுநர் மீது இந்த விவகாரத்தில் அதிகமான விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து இதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. அதில் ” தமிழ் […]