சென்னை : கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. 10 தலைப்புக்கள் கீழ் மாநிலம் முழுவதும் இருந்து 17ஆயிரம் பேர் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று இருந்தார். இந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் இணையத்தில் திமுகவினர் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். […]