தன்னலமற்று வேலை செய்வோர்களை பாராட்டும் விதமாக, இந்தியா முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து மக்கள் கைதட்டுமாறு இந்திய பிரதமர் மோடி கூறினார்.
unknown nodeஇந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரின் இல்லத்தின் வாசலில் நின்று அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக கைகளை தட்டினார். அவர்மட்டுமின்றி, தமிழக மக்கள் பலரும் தங்களின் வீட்டின் வெளியே நின்று கைத்தட்டி கரவொலிகளை எழுப்பி வருகின்றனர்.