சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சேலத்தில் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]
தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும் என்று சென்னை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரை. புதிய வகை கொரோனா குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பல்வேறு உத்தரவு மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக […]
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை. சீனாவை மீண்டும் மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவல், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி […]
வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது . இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் இருக்க வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் […]
தமிழ்நாட்டில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி […]
தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உயர்வு. தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உள்ளது. இதுபோன்று இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 34,17,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், குறிப்பாக இன்று இறந்தும் எதும் பதிவாகவில்லை என்றும் […]
புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல். கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 புதிய கொரோனா வகை கண்டறியப்பட்டது என தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, குணமாகிவிட்டதாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், […]
தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது குணமாகிவிட்டதாக கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை […]
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை ஐஐடி வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்,கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக […]
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர். அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு […]
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் […]
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 261 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 223 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இன்று 51,796 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,50,817 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் மேலும் 1 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 38,012 ஆக உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 348 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 320 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இன்று 52,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,50,041 […]
தமிழகத்தில் இதுவரை கொரோனவால் பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2,153 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,98,231-ஆக அதிகரித்துள்ளது. கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆகும், இதுவரை கொரோனாவால் […]
கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்தாலும், கொரோனா தடுப்பூசி அதிகமானோர் எடுத்து கொண்டுள்ளதால், உயிரிழப்புகள் குறைந்த அளவில் ஏற்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாரம்தோறும் தற்பொழுது சனிக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் […]
பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்பொழுது, மக்கள் காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கை கடைப்பிடித்து பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , 12,484 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா இன்று முதல் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நிலையை ஆய்வு செய்து அதன் பின்பு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா அதிகளவில் பரவி வருவதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஜனவரி 31 ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் ஒரே நாளில் 23,459 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவமனையிலிருந்து 9,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]