“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என முதல்வர் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனாவால் இதுவரை 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ கடக்கவுள்ளது. இதன்காரணமாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதற்கு மத்திய அரசும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான […]
தன்னலமற்று வேலை செய்வோர்களை பாராட்டும் விதமாக, இந்தியா முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து மக்கள் கைதட்டுமாறு இந்திய பிரதமர் மோடி கூறினார். இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரின் இல்லத்தின் வாசலில் நின்று அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக கைகளை தட்டினார். அவர்மட்டுமின்றி, தமிழக மக்கள் பலரும் தங்களின் வீட்டின் வெளியே நின்று கைத்தட்டி கரவொலிகளை எழுப்பி வருகின்றனர்.
வாழ்வில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனித்தன்மை கொண்டு வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டியது அவசியம். மனிதர்கள் தங்களுக்கென தனித்தன்மையுடன் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே போல் நன்றியுணர்வு, மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். எந்த உணர்வு இல்லாவிடினும், நன்றியுணர்வு கட்டாயம் மனிதனிடத்தில் இருக்க வேண்டும் என்று வள்ளுவரும் கூறிச்சென்றுள்ளார். இந்த பதிப்பில் மனிதர்கள் தங்கள் வாழ்வில் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமா என்று படித்து அறியலாம், […]