“யாரும் கவலைப்படாதீர்கள்... நான் இருக்கிறேன்”- முதல்வர் ஸ்டாலின்.!

கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

TN Govt -Students

சென்னை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் சென்னை மாநகராட்சியால் புதிதாக கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளியை இன்று திறந்து வைத்தார். இந்தப் பள்ளி ஜி.கே.எம். காலனி 12வது தெருவில் அமைந்துள்ளது, இதன் கட்டுமானத்திற்கு மொத்தம் 4.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

இதில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 2.43 கோடி ரூபாயும், டி.எம்.கே மக்களவை உறுப்பினர் பி.வில்சனின் உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து 1.8 கோடி ரூபாயும் பயன்படுத்தப்பட்டது. திறப்பு விழாவில் முதலமைச்சர் மாணவர்களுடன் உரையாடி, பள்ளி பைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”அனிதா அகாடமியில் பெற்றிருக்கும் பயிற்சி ஒரு சின்ன அடையாளம்தான். தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதுபோல், மாணாக்கர்களும் தங்களது திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

படிப்புதான் கடைசி வரை துணை நிற்கும், அதுதான் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். என் உடலில் உயிர் இருக்கிற வரையில், தலைவர் கலைஞர் கற்றுத்தந்த அந்த உழைப்பு என் உதிரத்தில் இருக்கும் வரை நிச்சயமாக எனது கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் இருக்கிறேன் உங்களோடு.

என் உடலில் உயிர் இருக்கிற வரை, தலைவர் கலைஞர் கற்றுத்தந்திருக்கும் உழைப்பு என் உதிரத்தில் இருக்கிற வரை, உறுதியாக என் கடமையை நிறைவேற்றுவேன். யாரும் கவலைப்பட வேண்டாம், நான் இருக்கிறேன். கல்வியினால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் முன்னேற்றத்திற்கானது அல்ல. கவர்ச்சியான வார்த்தைகளை கூறி, பின்னுக்கு கூட்டி செல்கிறார்கள். எனவே, எதிர்காலத்திற்கு என்ன தேவையோ, உங்களுக்கு என்ன தேவையோ அதை நோக்கி நீங்கள் நடைபோட வேண்டும்” என்று கூறியுள்ளார்.